ராணுவத்தில் சேர ஆர்வம் காட்டும் இளைஞர்கள், ராணுவபேட்டையாக அடையாளம் காணப்படும் கிராமம்

வேலூர் அருகே ராணுவத்தில் சேர ஆர்வம் காட்டும் இளைஞர்களால் அந்த ஊரே ராணுவபேட்டையாக அடையாளம் காணப்படுகிறது.
ராணுவத்தில் சேர ஆர்வம் காட்டும் இளைஞர்கள், ராணுவபேட்டையாக அடையாளம் காணப்படும் கிராமம்
x
வேலூர் மாவட்டம் கணியம்பாடியை அடுத்துள்ள கம்மவான்பேட்டை என்ற ஊரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இந்த ஊரின் சிறப்பு என்பதே இங்குள்ள வீடுகளின் பெரும்பாலான ஆண்கள் ராணுவத்தில் பணிபுரிகிறார்கள் என்பதுதான்.

தமிழகத்திலேயே அதிகஅளவில் ராணுவத்தில் சேரும் இளைஞர்களை கொண்ட ஊர் இது தான். 1972ஆம் ஆண்டு கம்மவான்பேட்டை பகுதிக்கு வந்த அப்போதைய கவர்னர் ஜெனரல் கே.கே.ஷா, இந்த ஊரின் பெருமைகளை கண்டு வியந்து ராணுவப் பேட்டை என பெயர் சூட்டி பெருமைப்படுத்தியுள்ளார். 

ஒரு குடும்பத்தில் எத்தனை ஆண்கள் இருந்தாலும் அவர்கள் அனைவரையும் ராணுவத்திற்கு அனுப்பி அழகு பார்க்கும் பெண்கள் தைரியமானவர்களாகவே அடையாளம் காட்டப்படுகிறார்கள். ஒரு மகன் உயிர்த் தியாகம் செய்தாலும், தன் பேரனை ராணுவத்திற்கு தயார் செய்து வரும் ஜெயலட்சுமி வீரப் பெண்மணியும் கூட.

இவரைப் போல தங்கள் வீட்டு ஆண்களுக்கு ஆக்கமும் ஊக்கமும் கொடுக்கும் பெண்கள் ஏராளம்... தலைமுறை தலைமுறையாக ராணுவத்தில் இருப்பதே தங்களுக்கு மகிழ்ச்சியானதாக இருப்பதாக கருதும் ஆண்களும் அதிகம்... ராணுவ பேட்டையாக தங்கள் ஊர் மாறியதில் மகிழ்ச்சியாகவே இருக்கின்றனர் அவர்கள்.

நாட்டிற்காக சேவை செய்வதை நோக்கமாக கொண்டு செயல்படும் இளைஞர்களால் ஒரு ஊரே பெருமையடைந்திருக்கிறது... தேசத்தின் நலனில் அக்கறை கொண்டவர்களாக நம் குழந்தைகளை வளர்க்க வேண்டியதும் அவசியம்.


Next Story

மேலும் செய்திகள்