மக்களோடு சுற்றி திரியும் காட்டு யானை - பலரின் உயிரை பறித்த சோகம்

காட்டை அழிப்பதினால் ஏற்படும் பின்விளைவே , விலங்குகள் நாட்டிற்குள் இடப் பெயர்ச்சி அடைவதற்கான காரணம் என்கிறார்கள் வன ஆர்வலர்கள்.
மக்களோடு சுற்றி திரியும் காட்டு யானை - பலரின் உயிரை பறித்த சோகம்
x
* ஒசூர் அருகே அமைந்துள்ள ஆழியாளம், போடூர் மற்றும் ராமாபுரம் ஆகிய மூன்று மலைகிராமங்களில் சுமார் 120 குடும்பத்தினர் வாழ்கின்றனர். 

* விவசாயத்தையும், கால்நடை வளர்ப்பதையும் முக்கிய தொழிலாக கொண்டு வாழும் இந்த கிராம மக்களுக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளன , காட்டுயானைகள்.

* விவசாய தோட்டங்களுக்கு அருகேயே தென்பெண்ணை ஆறும் ஓடுவதால், தேவையான உணவு மற்றும் தண்ணீர் கிடைக்கும் இந்த இடத்தில் தஞ்சம் அடைந்து விடுகின்றன, காட்டுயானைகள்.

* கர்நாடகா மாநிலம் பன்னார்கட்டா வனப்பகுதியில் இடப்பெயர்ச்சி காலங்களில் வெளியேறும் காட்டுயானைகளின் கூட்டம் பல வனப்பகுதிகளை கடந்து போடூர் வனப்பகுதியில் தஞ்சமடைகின்றன.

* காட்டுயானைகளின் தாக்குதலால் விவசாய தோட்டங்கள், குடியிருப்பு வீடுகள் ஆகியவை சேதமடைந்து வரும் நிலையில், தாக்குதலில் உயிரிழந்தவர்களின் பட்டியலும் நீண்டு கொண்டே செல்கிறது.

* கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை ஐந்து ஆண்டுகளில் 35 பேர் காட்டு யானைகளின் தாக்குதலுக்கு உயிரிழந்துள்ளனர், 28 பேர் காயமடைந்துள்ளனர்.

* எண்ணிக்கையில் குறைந்து வரும் இந்த யானைகளை பாதுகாப்பது ஒரு புறம் இருக்க, காட்டு யானைகளுடனான மனித மோதல்களை தவிர்ப்பது தலையாய கடமையாக விளங்குகிறது.

* காட்டை அழிப்பதினால் ஏற்படும்  பின்விளைவே , விலங்குகள் நாட்டிற்குள் இடப் பெயர்ச்சி அடைவதற்கான காரணம் என்கிறார்கள் வன ஆர்வலர்கள். காட்டை அழிக்கும் போக்கை கை விட்டு இயற்கையை பேணிகாப்பதே இதற்கு ஒரே வழி.


Next Story

மேலும் செய்திகள்