தமிழகத்தில் முக்கிய அணைகளின் நீர் இருப்பு

தமிழகத்தில் உள்ள முக்கிய அணைகளின் நீர் இருப்பு பற்றிப் பார்க்கலாம்.
தமிழகத்தில் முக்கிய அணைகளின் நீர் இருப்பு
x
* கேரளாவில் பருவமழை தீவிரமடைந்துள்ளதால், தேனி மாவட்டம் முல்லை பெரியாறு அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துள்ளதால், முழு கொள்ளளவான 152 அடியில் நீர்மட்டம் 135 அடியை எட்டியுள்ளது.

* மேட்டூர் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியுள்ளது.

* திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணையில் மொத்த கொள்ளளவான 119 அடியில் தற்போது நீர்மட்டம் 92 அடி நிரம்பி உள்ளது.

* கிருஷ்ணகிரி மாவட்டம் கே.ஆர்.பி. அணையில் மொத்த கொள்ளளவான 52 அடியில், நீர்மட்டம் 29 அடியாக உள்ளது.

* நெல்லை மாவட்டம் பாபநாசம் அணையில், மொத்த கொள்ளளவான 143 அடியில், நீர்மட்டம் 117 அடியாக உள்ளது.

* மணிமுத்தாறு அணையின் மொத்த கொள்ளளவான 118 அடியில் நீர்மட்டம் தற்போது 79 அடியாக உள்ளது.

* ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் முழு கொள்ளளவான 105 அடியில், தற்போது நீர்மட்டம் 98 அடியாக உள்ளது.

* வைகை அணையின் நீர்மட்டம் 71 அடியில், 60 அடியை எட்டியுள்ளது.

* திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம், மொத்தமுள்ள 110 அடியில் 87 அடியை எட்டியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் கே.ஆர்.பி. அணையில் முழு கொள்ளளவான 52 அடியில்,  நீர்மட்டம் தற்போது 29 அடியாக உள்ளது. 

* இதேபோல், சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 117 அடியாக உள்ளது. ஒசூர் கெலவரப்பள்ளி அணையில் முழு கொள்ளளவான 44 அடியில், நீர்மட்டம் 42 அடியை எட்டியுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்