மேட்டூர் அணையிலிருந்து அதிக அளவு நீர் திறக்கப்படுவதால் 9 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

மேட்டூர் அணையிலிருந்து அதிக அளவு நீர் திறக்கப்படுவதால் 9 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருவதாக வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் தெரிவித்துள்ளார்.
மேட்டூர் அணையிலிருந்து அதிக அளவு நீர் திறக்கப்படுவதால் 9 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
x
கர்நாடகாவில் இருந்து வரும் நீரின் அளவு அதிகரித்ததை தொடர்ந்து  மேட்டூர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், திருச்சி, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களின் காவிரி கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வருவாய் நிர்வாக ஆணையர் மாவட்ட ஆட்சியர்களுக்கு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். அதன் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர்கள், வருவாய்த்துறை, காவல்துறை, உள்ளாட்சித்துறை, பொதுப்பணித்துறை, அதிகாரிகளைக் கொண்டு மண்டல அளவிலான குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆற்றில் குளிக்கவோ, நீந்தவோக் கூடாது எனவும் செல்பி எடுக்கக் கூடாது என கரையோர மக்கள் அறிவுறுதப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆங்காங்கே பாதுகாப்பு அறிவுறுத்தலுடன் அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கூடுதலாக திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர் மாவட்ட நிர்வாகங்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்