கோயிலில் அர்ச்சகராக பூஜை செய்யும் திருநங்கை

மதுரை அருகே திருநங்கை ஒருவர் தன் சொந்த செலவில் கோவில் கட்டி அர்சசகராகவும் இருந்து வருகிறார்.
கோயிலில் அர்ச்சகராக பூஜை செய்யும் திருநங்கை
x
* மதுரை அருகே திருநங்கை ஒருவர் தன் சொந்த செலவில் கோவில் கட்டி அர்சசகராகவும் இருந்து வருகிறார்.

* மதுரை திருப்பாலை பகுதியை சேர்ந்த நடராஜன் - மீனா தம்பதியருக்கு ஐந்தாவதாக பிறந்தவர் ஸ்ரீநிதி. திருநங்கையான இவர், எம்பிஏ படிப்பை முடித்துள்ளார். 

* கடவுள் நம்பிக்கை மிகுந்தவரான ஸ்ரீநிதி, தன் சொந்த செலவில் அலங்காநல்லூரை அடுத்த கீழச்சின்னம்பட்டியில் கோயில் ஒன்றை கட்டியுள்ளார். 

* தீர்த்தக்கரை மாரியம்மனுக்காக பீடம் எழுப்பிய ஸ்ரீநிதி, அந்த கோயிலின் அர்ச்சகராக இருந்து,  பக்தர்களுக்கு அருள்வாக்கும் சொல்லி வருகிறார்.

* கோயிலில் 9 சிறுமிகளுக்கு கன்னியா பூஜை வழிபாடுகளும், 308 பெண்களுக்கு சுமங்கலி பூஜைகளையும் திருநங்கை ஸ்ரீநிதி திறம்பட செய்துள்ளார்.

* கோயிலின் அன்றாட பணிகளோடு ஆயிரம் பேருக்கு அன்னதானமும் வழங்கிய திருநங்கை ஸ்ரீதியை ஏராளமானோர் பாராட்டி செல்கின்றனர்.

* காவல்துறை, நீதித்துறை என பல துறைகளில் திருநங்கைகள் தடம் பதித்து வரும் நிலையில் கோயிலின் அர்ச்சகராக தன்னை அடையாளப் படுத்தி இருக்கிறார் ஸ்ரீதி.

* அவரின் முயற்சிக்கும் முன்னெடுத்த செயலுக்கும் வாழ்த்துகள் குவிந்து வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்