கே.சி. பழனிசாமி அளித்த மனு தொடர்பான வழக்கு: 4 வாரங்களுக்குள் முடிவு எடுக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு, டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு

அ.தி.மு.க. விதிகளில் கொண்டுவரப்பட்ட மாற்றங்களை ஏற்றுக்கொள்ள கூடாது என கே.சி. பழனிசாமி அளித்த மனு மீது 4 வாரங்களுக்குள் முடிவு எடுக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு, டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கே.சி. பழனிசாமி அளித்த மனு தொடர்பான வழக்கு: 4 வாரங்களுக்குள் முடிவு எடுக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு, டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு
x
அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட கே.சி. பழனிசாமி, கட்சி விதிகளில் கொண்டுவரப்பட்ட மாற்றங்களை எதிர்த்து கடந்த ஏப்ரல் 15-ம் தேதி தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதி இருந்தார்.அதில், கட்சியின் பொதுச் செயலாளர், அடிப்படை உறுப்பினர்களால் தேர்தல் மூலமே தேர்வு செய்யப்பட வேண்டும் என்றும்,ஜெயலலிதா இறந்த பிறகு கட்சியில் இருந்து உறுப்பினர்களை நீக்கம் செய்ய எடுத்த நடவடிக்கைகளை ரத்து செய்ய வேண்டும் என்றும் மனுவில் கே.சி. பழனிசாமி தெரிவித்திருந்தார்.ஜெயலலிதா இறந்த பிறகு கட்சியில் இருந்து உறுப்பினர்களை நீக்கம் செய்ய எடுத்த நடவடிக்கைகளை ரத்து செய்ய வேண்டும் என்றும் மனுவில் கே.சி. பழனிசாமி தெரிவித்திருந்தார்.இந்த மனு மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை என டெல்லி உயர்நீதிமன்றத்தில் பழனிசாமி மனு தாக்கல் செய்தார்.இதனை விசாரித்த நீதிபதி காமேஸ்வர் ராவ், கே.சி.பழனிசாமியின் கோரிக்கை மீது 4 வாரங்களுக்குள் விசாரித்து முடிவு எடுக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டார்.



Next Story

மேலும் செய்திகள்