வண்டலூர் உயிரியல் பூங்காவில் இருந்து தப்பியோடிய கழுதைப்புலி பிடிபட்டது

சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் இருந்து தப்பியோடிய கழுதைப்புலி பிடிபட்டது.
வண்டலூர் உயிரியல் பூங்காவில் இருந்து தப்பியோடிய கழுதைப்புலி பிடிபட்டது
x
கடந்த ஒன்றாம் தேதி, விலங்குகள் பரிமாற்ற திட்டத்தின் கீழ் மைசூரு உயிரியல் பூங்காவில் இருந்து, சென்னை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு  4 கழுதைப்புலிகள் கொண்டுவரப்பட்டன. கூண்டில் அடைக்கப்பட்டிருந்த ஆண் கழுதைப்புலி ஒன்று நேற்று தப்பிச்சென்றது. இதனைத்தொடர்ந்து, தப்பிச் சென்ற கழுதைப்புலியை தேடும் பணிகளில், தொண்ணூற்றுக்கும் மேற்பட்ட வனத்துறை அதிகாரிகள் ஈடுபட்டனர். பூங்காவில் உள்ள 5 இடங்களில் மாட்டு இறைச்சி யுடன் கூண்டுகள் வைக்கப்பட்டு கண்காணிப்பு கேமராக்கள் மூலம் இரவு விடிய விடிய தேடுதல் வேட்டை நடைபெற்றது. இதையடுத்து இன்று காலை 6.30 மணியளவில் கழுதைப்புலி பிடிக்கப்பட்டது. தப்பிய இடத்தில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் வைக்கப்பட்டிருந்த கூண்டிற்கு கழுதைப்புலி வந்தபோது, வனத்துறையினர் அதனை பிடித்தனர்.



Next Story

மேலும் செய்திகள்