ரூ.10 நாணயங்கள் வாங்கப்படுகிறதா? மறுக்கப்படுகிறதா? - தந்தி டி.வி. நடத்திய கள ஆய்வு
பதிவு : ஆகஸ்ட் 05, 2018, 09:41 AM
மாற்றம் : ஆகஸ்ட் 05, 2018, 03:53 PM
10 ரூபாய் நாணயங்களின் புழக்கத்தில் உள்ள சிக்கல்கள் குறித்த கள நிலவரத்தை அறிவதற்காக தந்தி டிவி,தமிழகம் முழுவதும் பல்வேறு நகரங்களில் மக்களிடம் கருத்து கேட்டது.
தமிழகத்தில் 10 ரூபாய் நாணயங்களின் புழக்கத்தில் பல்வேறு சிக்கல்கள் இருப்பது தெரியவந்தது.சிறுகடைகள் முதல் பேருந்துகள், மருத்துவமனைகள் என பல்வேறு இடங்களில் பத்து ரூபாய் நாணயங்கள் வாங்க மறுக்கப்படுவதாக புகார்கள் எழுந்தன. புழக்கத்தில் உள்ள 10 ரூபாய் நாணயங்கள் செல்லும் என்றும், வாங்க மறுப்பது தண்டனைக்குரிய குற்றம் எனவும் ரிசர்வ் வங்கி பலமுறை ஊடகங்களில் அறிவிப்பினை வெளியிட்டது. ஆனாலும், 10 ரூபாய் நாணயங்கள் செல்லாது என்று, எப்போதோ பரவிய வதந்தி இன்னமும் முற்றுப்பெறாமல், நீடிக்கிறது. இந்நிலையில் 10 ரூபாய் நாணயங்களின் புழக்கத்தில் மக்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் என்ன என்பது குறித்து தமிழகம் முழுவதும் தந்தி டி.வி. கள ஆய்வு நடத்தியது. 

வணிகர்கள், வாடிக்கையாளர்கள் என பல தரப்பு மக்களிடமும் தந்தி டி.வி. கருத்து கேட்டது. ஒட்டு மொத்தமாக தமிழகம் முழுவதும் 262 பேரிடம் கருத்து கேட்கப்பட்டது. 

10 ரூபாய் நாணயங்களை வணிகர்கள் வாங்குகிறார்களா என்ற கேள்விக்கு 26 சதவீதம் பேர் மட்டுமே ஆம் என்று தெரிவித்தனர். மீதம் 74 சதவீதம் இல்லை என்று பதிலளித்தனர். மக்களிடம் பெற்றுக்கொள்கிறோம். ஆனால், மக்கள் எங்களிடம் இருந்து பெற்றுக்கொள்வதில்லை என்பதும் வங்கிக் கணக்குகளில் செலுத்த முடிவதில்லை.வாங்கப்பட்ட நாணயங்கள் தேங்கிக் கிடக்கின்றன என்பதும், வணிகர்களின் குற்றச்சாட்டாக உள்ளது. அரசுப்பேருந்துகள்,வங்கிகள் போன்ற அரசு நிறுவனங்களிலே 10 ரூபாய் நாணயங்கள் வாங்க மறுக்கப்படுவதாகவும், கடைகளிலும் பெற்றுக்கொள்ளப்படாததால்  புழக்கத்தில் விடுவது மிகவும் சிரமமாக இருப்பதாகவும் மக்களின் கருத்தாக உள்ளது.

பேருந்துகளில் ஏன் வாங்க மறுக்கப்படுகிறது என்ற கேள்விக்கு மக்கள் வாங்குவதில்லை என்பதால், நாணயங்கள் தேங்கிவிடுவதாகவும், நடத்துநர்கள் பதிலளித்தனர். நாணயங்களை எண்ணவோ, சேமித்துவைக்கவோ போதிய கட்டமைப்பு வசதியில்லை என்பதும், 10 ரூபாய் நாணயங்கள் புழக்கத்திற்கு மட்டுமே தவிர வங்கியில் செலுத்துவதற்கில்லை என்பதும் வங்கிகளின் எண்ணமாக உள்ளது. மேலும், ரிசர்வ் வங்கி 10 ரூபாய் நாணயங்கள் செல்லும் என்றுதான் கூறியுள்ளதே தவிர, வங்கிகள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறவில்லை என வங்கி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

 மொத்தத்தில் 100 க்கு 26 சதவீத மக்கள் மட்டுமே 10 ரூபாய் நாணயங்கள் வாங்கப்படுவதாகவும், மீதமுள்ள 74 சதவீதம் பேர் இல்லை என்றும் தெரிவித்தனர். இதன் மூலம், 10 ரூபாய் நாணயங்களை பெரும்பாலான மக்கள் பயன்படுத்த முடியாமல் சிரமங்களை எதிர்கொண்டு வருவது ஆய்வில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

இந்தியா - குரோஷியா இடையே புதிய ஒப்பந்தம்

இந்தியா - குரோஷியா இடையே புதிய ஒப்பந்தம்

22 views

பற்றாக்குறையிலேயே நீடிக்கும் நாட்டின் நடப்பு கணக்கு

ஏற்றுமதியை விட இறக்குமதி அதிகமாக இருப்பதால் நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறை நிலையிலேயே நீடிக்கிறது.

74 views

வங்கி டெபாசிட் பாதியாக சரிவு - ரிசர்வ் வங்கி அறிக்கை

இந்திய குடும்பங்கள் வங்கிகளில் டெபாசிட்டுகளாக சேமிக்கும் பணத்தின் அளவு பெருமளவு சரிந்திருப்பது ரிசர்வ் வங்கி அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.

4252 views

பிற செய்திகள்

உள்ளாட்சி தேர்தலை நடத்தாததற்கு அதிகாரிகளை பொறுப்பாக்க முடியாது - உயர் நீதிமன்றத்தில் விசாரணை

உள்ளாட்சி தேர்தலை நடத்தாததற்கு அதிகாரிகளை பொறுப்பாக்க முடியாது என உயர் நீதிமன்றத்தில் அதிகாரிகள் தரப்பில் வாதிட்டப்பட்டது.

11 views

வெளிநாட்டினர் வழங்கிய யோகா பயிற்சி

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் தனியார் கல்லூரி மாணவர்களுக்கு அர்ஜென்டினாவை சேர்ந்த யோகா ஆசிரியர்கள், யோகா பயிற்சி அளித்தனர்.

15 views

ஆந்திராவுக்கு ரேசன் அரிசி கடத்தல் : கடத்தல்காரர்களை மடக்கி பிடித்த இளைஞர்கள்

வாணியம்பாடி அருகேஆந்திராவுக்கு கடத்த முயன்ற இரண்டறை டன் ரேஷன் அரிசியை இளைஞர்கள் ஒன்று சேர்ந்து மடக்கி பிடித்து அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

12 views

போதையில் இருசக்கர வாகனத்தை இயக்கிய தலைமை காவலர் : சாலையை கடக்க முயன்ற மாணவன் மீது மோதல்

சிவகங்கை அருகே மதுபோதையில் தலைமை காவலர் ஓட்டி சென்ற இருசக்கர வாகனம் மோதியதில் மாணவன் படுகாயம் அடைந்தார்.

16 views

காவல் உதவி ஆய்வாளர் பணியிட மாறுதலுக்கு எதிர்ப்பு...

தஞ்சை அருகே காவல் உதவி ஆய்வாளரை பணியிட மாற்றம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் பொதுமக்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

9 views

இளம்பெண் பாலியல் பலாத்கார சம்பவம் : பெண்ணின் தாய் உயர்நீதிமன்றத்திற்கு கடிதம்

கும்பகோணம் அருகே திருபுவனத்தில் உள்ள ஜவுளிக்கடை ஒன்றில் பணிபுரிந்த இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.

41 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.