சி.சி.டி.வி.கேமரா, 'இ-சலான்' குறித்த 2 குறும்படம்

சி.சி.டி.வி. கேமராக்களின் முக்கியத்துவம் மற்றும் போக்குவரத்து விதிமீறல் அபராதம் குறித்து விளக்கும் 2 குறும்படங்களை சென்னை மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் வெளியிட்டார்.
சி.சி.டி.வி.கேமரா, இ-சலான் குறித்த 2 குறும்படம்
x
 சென்னை வேப்பேரியில் உள்ள மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்ற  நிகழ்ச்சியில், சிசிடிவி கேமராக்கள் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் எடுக்கப்பட்ட " மூன்றாம் கண்" என்ற  குறும்படத்தின் சி.டி.யை மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் வெளியிட நடிகர் விவேக் பெற்றுக்கொண்டார். 

இதேபோல் போக்குவரத்து காவல்துறை அறிமுகம் செய்துள்ள பணமில்லா அபராத கட்டணம் செலுத்தும் இ-சலான் முறை குறித்து விளக்கும் குறும்படத்தின் சி.டி.யை காவல் ஆணையர் விஸ்வநாதன் வெளியிட பைக் ரேசர் அலிஷா அப்துல்லா பெற்று கொண்டார். 

இரண்டு குறும்படங்களையும் எடுப்பதற்கு உதவி செய்த நடிகர் விவேக், அலிஷா அப்துல்லா மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு காவல் ஆணையர் விஸ்வநாதன் நன்றி தெரிவித்து கொண்டார். 

Next Story

மேலும் செய்திகள்