ஆகஸ்ட் 15ல் மூலிகை பெட்ரோல் விற்பனைக்கு வரும் - ராமர் பிள்ளை
பதிவு : ஆகஸ்ட் 04, 2018, 04:47 PM
மாற்றம் : ஆகஸ்ட் 04, 2018, 04:48 PM
ஆகஸ்ட்15 ல் மூலிகை பெட்ரோல் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கிறார் ராமர் பிள்ளை.
* 1990 களின் இறுதியில் மூலிகை பெட்ரோல் கண்டுபிடித்திருப்பதாகச் சொல்லி பரபரப்பை ஏற்படுத்தியவர், ராமர் பிள்ளை. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தைச் சேர்ந்தவர். 

* மூலிகை பெட்ரோல் விவகாரத்தில் புகழின் உச்சிக்கு சென்ற ராமர் பிள்ளை, தனது தயாரிப்பை ராமர் தமிழ் தேவி மூலிகை எரிபொருள் என்று பெயரிட்டு விற்பனையும் செய்தார்.

* இதனிடையே, மூலிகை பெட்ரோல் என்ற பெயரில் பெட்ரோலியப் பொருட்களான டொலுவின், நாப்தா போன்றவற்றை கலப்படம் செய்து விற்றதாக புகார் எழுந்தது.

* இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த சிபிஐ அதிகாரிகள், ராமர்பிள்ளையை கைது செய்தனர்.பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில், 2016 ஆம் ஆண்டு, ராமர் பிள்ளை உள்ளிட்ட 5 பேருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது நீதிமன்றம். 

* இந்த நிலையில், தற்போது மீண்டும் மூலிகை எரிபொருளை விரைவில் விற்பனைக்கு கொண்டுவருவேன் என்று பரபரப்பைக் கிளப்புகிறார், ராமர்பிள்ளை.

* அரசியல் தலையீடு காரணமாகவே தன் மீது வழக்கு தொடரப்பட்டதாக, குற்றம்சாட்டுகிறார். 2015 ஆம் ஆண்டு, தனது கண்டுபிடிப்பை பிரதமர் மோடி பார்வையிட்டதாகவும் கூறுகிறார், ராமர்பிள்ளை. 

* 90 களின் இறுதியில் முறையான அனுமதியுடனே தன்னுடைய மூலிகை எரிபொருளை விற்பனை செய்ததாகக் கூறும் ராமர்பிள்ளை, அரசுக்கு வரி செலுத்தியதாகவும் குறிப்பிடுகிறார்.

* ஒருபக்கம், மூலிகை எரிபொருள் என்ற ஒற்றை வார்த்தையால் இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்த ராமர் பிள்ளை, மறுபக்கம் மோசடிப் பேர்வழி என்று நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டார். 

* ஆனாலும், தன்னுடைய கண்டுபிடிப்பு உண்மைதான் என்று இன்றும் வாதிடும் ராமர்பிள்ளை விரைவில் அதனை நிரூபிப்பேன் என்றும் சவால் விடுகிறார்.

* தற்போது மூலிகை எரிபொருளை தனியார் நிறுவனம் ஒன்றின் மூலம் விற்பனைக்கு கொண்டுவர இருப்பதாக ராமர்பிள்ளை குறிப்பிட்ட, அந்த நிறுவனத்தை, தொடர்புகொண்டு கேட்டபோது, ராமர் பிள்ளைக்கும் தங்களுக்கும் எந்தவித சம்மந்தமும் இல்லை என்று சுருக்கமாக முடித்துக்கொண்டனர்.
தொடர்புடைய செய்திகள்

கேரளா வெள்ளம் உயிரிழப்பு 357 ஆக உயர்வு: முதலமைச்சர் பினராயி விஜயன்

கேரள மழை வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 357 ஆக உயர்ந்துள்ளது.

44 views

"பேருந்து இல்லாததால் திருமணம் ஆகவில்லை"

நெல்லை மாவட்டம் வடக்குகழுவூர் கிராமத்திற்கு பேருந்து உள்ளிட்ட அடிப்படை வசதியின்றி அப்பகுதி மக்கள் அவதியுறுகின்றனர்.

1765 views

காவலரை தாக்கிய சட்டக்கல்லூரி மாணவர் கைது

சென்னையில் காவலரை தாக்கிய சட்டக்கல்லூரி மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

3311 views

எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி மனு தாக்கல்

எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி மனு தாக்கல்

3883 views

பிற செய்திகள்

சிலைக்கடத்தல் வழக்குகளை சிபிஐ-க்கு மாற்ற அரசுக்கு அதிகாரம் உள்ளது - கோயில் செயல் அதிகாரிகள் மனு

தமிழ்நாடு கோயில் செயல் அதிகாரிகள் பேரவை மனுவில், தமிழகத்தில் லட்சத்திற்கு மேற்பட்ட சிலைகள் இந்து அறநிலையத்துறையின் சிறப்பான கண்காணிப்பில் பாதுகாப்பாக உள்ளதாகவும், சிலை திருட்டுகள் என்பது இப்போது நடந்தது அல்ல என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

29 views

காரைக்குடி மக்களிடம் சேகரிக்கப்பட்ட ரூ.10 லட்சம் மதிப்புள்ள நிவாரணப் பொருட்கள் கேரள மாநிலத்திற்கு அனுப்பிவைப்பு...

காரைக்குடி மக்களிடம் சேகரிக்கப்பட்ட 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வெள்ள நிவாரணப் பொருட்கள் கேரள மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

36 views

மதுரை தனியார் நூற்பாலைக்கு வெடி குண்டு மிரட்டலால் பரபரப்பு

மதுரையில் உள்ள மதுரா கோட்ஸ் ஆலைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

95 views

பள்ளிகளுக்கு செல்லாமல் நேரடியாக 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் திட்டம் ரத்து - தேர்வுத்துறை இயக்குனர் அறிவிப்பு

10-ம் வகுப்பு முடித்த மாணவர்கள், பள்ளிகளுக்கு செல்லாமல் நேரடியாக 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் திட்டம் ரத்து - தேர்வுத்துறை இயக்குனர் அறிவிப்பு

34 views

குறைந்தது பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கை

கடந்தாண்டை போல் நடப்பாண்டும் பொறியியல் படிப்பில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.

286 views

மறுசுழற்சிக்கு பிளாஸ்டிக் பொருட்கள் கொடுத்தால் கூப்பன்...

தூத்துக்குடியின் கடற்கரை பூங்காவில் மாவட்ட நிர்வாக சார்பில் அமைக்கப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருட்களை மறு சுழற்சி செய்யும் இயந்திரம்.

119 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.