அடிப்படை வசதியின்றி தவிக்கும் கிராம மக்கள்

சாலை வசதி இல்லாததால் பேருந்து சேவையின்றி தவித்து வருவதாக, ராணிப்பேட்டை அருகேயுள்ள லாலிகுப்பம் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
அடிப்படை வசதியின்றி தவிக்கும் கிராம மக்கள்
x
வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை அருகேயுள்ள லாலிகுப்பம் கிராமத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். சாலை, பேருந்து உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் இக்கிராம மக்கள், அருகில் இருக்கும் அம்மூரை சார்ந்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. சாலை வசதி இல்லாததால், 1 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் அம்மூருக்கு செல்ல, ரயில்வே கேட்டை கடந்து,10 கிலோ மீ்ட்டர் சுற்றி செல்ல வேண்டியுள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர். சாலை வசதி இல்லாததால் அரசு பேருந்து சேவையின்றி தவித்து வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்

Next Story

மேலும் செய்திகள்