மனைவிக்கு வீட்டில் பிரசவம் பார்த்த கணவர்
பதிவு : ஆகஸ்ட் 03, 2018, 10:14 PM
மாற்றம் : ஆகஸ்ட் 04, 2018, 12:13 PM
தேனி அருகே மனைவிக்கு வீட்டில் பிரசவம் பார்த்த கணவர், மருத்துவமனைக்கு செல்ல மறுத்து சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
தேனி அருகே மனைவிக்கு வீட்டில் பிரசவம் பார்த்த கணவர்,மருத்துவமனைக்கு செல்ல மறுத்து சுகாதாரத்துறை அதிகாரிகளுடன்கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். போடி அருகே உள்ளஷ கோடாங்கிபட்டி என்ற இடத்தில் நிகழ்ந்தது. தனுஷ்கோடி என்பவரின் 27 வயது மகன் கண்ணன் என்பவர், தனது மனைவி மகாலட்சுமிக்கு தனது வீட்டிலேயே பிரசவம் பார்த்தார். தகவல் அறிந்து விரைந்து வந்த மருத்துவக்குழுவினர், தொப்புள் கொடியை அகற்ற வேண்டும் என அறிவுறுத்தியும் கேட்க மறுத்து, கண்ணன், கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஆபத்தை உணர்ந்த மருத்துவக்குழுவினர், உடனடியாக ஆம்புலன்ஸ்களை வரவழைத்து, தயார் நிலையில் வைத்தனர். பல மணி நேரம் நடத்திய பேச்சுவார்த்தைக்குப்பின் கண்ணன் சம்மதம் தெரிவித்ததால், குழந்தையின் தொப்புள் கொடி அகற்றப்பட்டது. இந்த விவகாரத்தில், மகனுக்கு உதவிய தந்தை தனுஷ்கோடி என்பவர் கைது செய்யப்பட்டார். யூ- டியூப் வீடியோ பார்த்து வீட்டில் பிரசவம் பார்த்த திருப்பூர் பெண் விவகாரம், கோவை - ஹீலர் பாஸ்கர் விவகாரம் என அடுத்தடுத்து பரபரப்பு சம்பவங்கள் அரங்கேறிய நிலையில், தேனி அருகே நிகழ்ந்த இந்த நிகழ்வு, மருத்துவ துறையினரை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

3-வது மனைவியை அடித்து கொன்ற கணவன்

தலைமறைவான கணவரை தேடும் காவல்துறை

176 views

'கலாம் சாட்' தயாரித்த மாணவர்களுக்கு இஸ்ரோ தலைவர் பாராட்டு

முதல் முறையாக பி.எஸ்.எல்.வி.-சி.44 ராக்கெட்டின் 4-வது நிலையில் 36 கிராம் எடை கொண்ட மிகச்சிறிய அளவிலான 'கலாம் சாட்' செயற்கை கோள் பொருத்தப்பட்டுள்ளது.

60 views

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை மற்றும் மிதமான மழை

தேனி மாவட்டம் பெரியகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக சாரல் மழை பெய்தது.

445 views

பிற செய்திகள்

50 ஆண்டுகளாக தொடர்ந்த ஏறுதழுவுதலுக்கு அனுமதி மறுப்பு - மக்கள் வேதனை

சேலம் மலங்காடு கிராமத்தில் தொடர்ந்து 50 ஆண்டுகளாக பின்பற்றி வந்த ஏறுதழுவுதல் விழாவிற்கு, தேர்தல் காரணமாக அனுமதி மறுக்கப்பட்டதால் கிராம மக்கள் வேதனை தெரிவித்தனர்.

29 views

தேசிய அளவில் புதிய பாடத்திட்டம் தயாரிப்பு பணி தொடக்கம்

தேசிய அளவில் புதிய பாடத்திட்டம் தயாரிப்பு பணி தொடங்கி உள்ளதாக தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் சேனாபதி தெரிவித்துள்ளார். *

42 views

மனைவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கு - சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடக்கோரி கணவர் மனு

மனைவி பாலியல் வன்கொடுமை செய்தது தொடர்பான புகாரின் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்காததால் வழக்கை சிபிசிஐடி விசாரிக்க உத்தரவிடக் கோரி, சாஜ் என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனுதாக்கல் செய்து இருந்தார்.

131 views

கஜா பாதிப்பில் இருந்து மீண்டு பூ பூத்த முந்திரி மரங்கள்

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கஜா புயல் பாதித்த ஒரு சில இடங்களில், முந்திரி மரங்களில் பூக்கள் பூத்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

14 views

மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் கொண்டாடிய ஹோலி

மதுரை விமான நிலையத்தில் பணியாற்றும மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் ஹோலி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

8 views

ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வு

சென்னை புளியந்தோப்பு ஸ்டிபன்சன் சாலையில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் 1500 குடும்பங்கள் வசித்து வருகின்றனா்.

16 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.