குற்றாலத்தில் கொழு கொழு குழந்தைகள் போட்டி - 60 குழந்தைகள் பங்கேற்பு

நெல்லை மாவட்டம், குற்றாலத்தில் நடைபெற்று வரும் சாரல் திருவிழாவில் நடைபெற்ற கொழு கொழு குழந்தைகள் போட்டி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
குற்றாலத்தில் கொழு கொழு குழந்தைகள் போட்டி - 60 குழந்தைகள் பங்கேற்பு
x
குற்றாலத்தில், தற்போது சாரல் திருவிழா வெகு விமர்சையுடன் நடத்தப்பட்டு வருகிறது. விழாவின் 6 ஆம் நாளான இன்று, கலைவாணர் அரங்கில் பெண்களுக்கான கோலப்போட்டியும், கொழு கொழு குழந்தைகளுக்கான போட்டியும் நடத்தப்பட்டது. கொழு கொழு குழந்தை போட்டியில் 60 குழந்தைகள், பெற்றோர்களுடன் பங்கேற்றனர். குழந்தையின் எடை, தலையின் சுற்றளவு, உணவு முறை, போடப்பட்ட தடுப்பூசிகள் என்ற அடிப்படையில் குழந்தைகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். போட்டியில் இசக்கியம்மாள் என்ற பெண்ணின் குழந்தைக்கு முதல் பரிசு வழங்கப்பட்டது
 

Next Story

மேலும் செய்திகள்