குழந்தை வரம் தரும் இருக்கன்குடி மாரியம்மன்

புராதன வரலாற்றை தாங்கிய ஆறுகளுக்கு இடையே வீற்றிருக்கும் இருக்கன்குடி மாரியம்மனைப் பற்றிய ஒரு செய்தித்தொகுப்பு.
குழந்தை வரம் தரும் இருக்கன்குடி மாரியம்மன்
x
* விருதுநகர் மாவட்டம் இருக்கன்குடியில் கங்கைக்கு நிகராகச் சொல்லப்படும் அர்ச்சுனா, வைப்பாறு என்னும் இரண்டு ஆறுகளுக்கு இடையே கோயில் கொண்டுள்ளாள் மாரியம்மன். 

* புராண வரலாறு சிறப்பை கொண்டுள்ள இந்த இரண்டு ஆறுகளுக்கு நடுவே, வீற்றிருக்கும் மாரியம்மன் சிவ அம்சமாகத் திகழ்வதால், சந்நதிக்கு எதிரே நந்தி உள்ளது பெரும் சிறப்பு.

* இங்கு வரும் குழந்தை இல்லாத தம்பதிகள்,  கரும்புத் தொட்டில் கட்டுவதாக வேண்டிக் கொள்கின்றனர். அம்மன் 
கருவளம் தந்தபின்னர், கரும்பில் தொட்டில் செய்து, அதில் குழந்தையை படுக்க வைத்து, சந்நதியை வலம் வருகின்றனர். 

* கண்கள் தொடர்பான நோய் உள்ளவர்கள் அம்மனின் அபிஷேக தீர்த்தத்தை கண்ணில் விட்டுக்கொள்ள, நோயில் இருந்து நிவாரணம் கிடைப்பதாக நம்பிக்கையுடன் கூறுகின்றனர்.

* இங்கே ஆயிரம் கண் பானை எடுப்பது, தீச்சட்டி எடுப்பது, அங்கப்பிரதட்சனம் செய்வது போன்ற நேர்த்திக்கடன்களை பக்தர்கள் நிறைவேற்றினாலும், கோயில் உள்ளே இருக்கும் மண்டபத்தில் ஆங்காங்கே சிலர் அப்படியே ஆணி அடித்தாற்போல் நாள் முழுவதும் அமர்ந்திருக்கிறார்கள். 

* எதிர்பாராத விதமாக கண் தெரியாமல் போனவர்கள், புத்தி சுவாதீனம் இல்லாதவர்கள்... இப்படி "வயனம்" காப்பதால் தீர்வு கிடைப்பதாக கூறுகின்றனர்.

* மதுரையில் இருந்து திருநெல்வேலி செல்லும் சாலையில் உள்ள சாத்தூரில் இறங்கி, கிழக்கே 8 கிலோ மீட்டர் தூரம் சென்றால் இருக்கன்குடி மாரியம்மன் கோயிலை அடையலாம். இங்கு வாரத்தில் செவ்வாய், வெள்ளி, ஞாயிற்று கிழமைகளில் பக்தர்கள் வருகை அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.



Next Story

மேலும் செய்திகள்