சேலம் பசுமை வழிச்சாலை திட்டத்திற்கு எதிரான வழக்கு :சட்டப்படியே நிலம் கையகப்படுத்தப்படுகிறது - மத்திய அரசு
பதிவு : ஆகஸ்ட் 03, 2018, 06:55 AM
சேலம் பசுமை வழிச்சாலை திட்டத்திற்கு சுற்றுச் சூழல் துறை ஒப்புதல் பெறாமல் எந்த பணியும் மேற்கொள்ள முடியாது என உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பசுமை வழிச்சாலை திட்டத்திற்கு எதிராக, பூவுலகின் நண்பர்கள் அமைப்பு, பாமக எம்.பி.அன்பு மணி உள்ளிட்டோர் தாக்கல் செய்த வழக்குகள் உயர் நீதிமன்ற நீதிபதிகள் சிவஞானம் மற்றும் பவானி சுப்புராயன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், தற்போதைய திட்டப்படி சாலை அமைக்கும் பகுதியில் 80 சதவீத விவசாய நிலங்களும், 10 சதவீத வனப்பகுதியும் வருகின்றன என சுட்டி காட்டினர். 

மேலும் நிலம் கையகப்படுத்தும் அறிவிப்பாணையின் படி 5 மாவட்டங்களில் பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம்  நடத்தப்பட வில்லை எனவும் குற்றம் சாட்டினர்.மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை ஒப்புதல் பெறும் முன்பே நிலம் கையகப்படுத்தும் பணிகள் தொடங்கியது,உச்ச நீதிமன்ற உத்தரவிற்கு எதிரானது என்றும் மனுதாரர் தரப்பு வழக்கறிஞர்கள்  குறிப்பிட்டனர்.இதையடுத்து, மத்திய அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், பசுமை வழிச்சாலைத் திட்டத்திற்கு, சட்டப்படியே நிலம் கையகப்படுத்தப்படுவதாக கூறினார்.

இந்த திட்டத்திற்கு இன்னும் சுற்று சூழல் துறையின்​ ஒப்புதல் பெறவில்லை என குறிப்பிட்டார். நில அளவீட்டு பணிகளை மேற்கொள்ளாமல் சுற்றுச் சூழல்  ஒப்புதல் பெற முடியாது எனவும் அவர் கூறினார். அனைத்து விதிகளையும் அரசு மீறும் என்ற யூகத்தில் வழக்கு தொடர முடியாது என்றும் மத்திய அரசு வழக்கறிஞர் கூறினார்.பசுமை வழிச்சாலை திட்டம் ஆரம்ப கட்டத்தில் இருப்பதாக, தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் தெரிவித்ததை தொடர்ந்து வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது. 

தொடர்புடைய செய்திகள்

மிடுக்கான தோற்றம், கனிவான குணம் : காத்திருந்து கொள்ளையடிக்கும் நூதன திருடன் கைது

முன்பின் அறிமுகம் இல்லாதவர்களிடம் பழகி நட்பை பெற்ற பின் கொள்ளையில் ஈடுபடும் நூதன திருடனை போலீசார் கைது செய்துள்ளனர்.

426 views

மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலைக்கு முயற்சி...

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே வேலை கிடைக்காத விரக்தியில் அருள்குமார் என்பவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

426 views

நெடுஞ்சாலை ஒப்பந்த பணிகள் - லஞ்ச ஒழிப்பு துறை தரப்புக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

நெடுஞ்சாலை ஒப்பந்தப் பணிகள் வழங்கியது தொடர்பாக உலக வங்கி அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டதா? என லஞ்ச ஒழிப்புத்துறையிடம் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

551 views

பிற செய்திகள்

மாணவர்களின் கல்விக்காக புதிய தொலைக்காட்சி சேனல் துவக்கம்

தமிழகம் முழுவதும் 40 ஆயிரம் அரசு பள்ளிகளில், வண்ண தொலைக்காட்சி பெட்டிகள் வாங்க, பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ள நிலையில், அரசு பள்ளி ஆசிரியர் குழுக்கள் மூலம், கல்வி தொலைக்காட்சிக்கான நிகழ்ச்சிகளும் இறுதி செய்யப்பட்டுள்ளன.

26 views

திமுக முன்னோடி சீத்தாபதி மறைவு : ஸ்டாலின் நேரில் அஞ்சலி

திமுகவின் ஒன்றுபட்ட சென்னை மாவட்ட செயலாளராக இருந்த 82 வயதான சீத்தாபதி, உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.

25 views

பழனி : திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டும் நிகழ்வு

திண்டுக்கல் மாவட்டம், பழனி பெரிய நாயகியம்மன் கோவிலில், திருஞான சம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டும் நிகழ்வு வெகு விமரிசையாக நடைபெற்றது.

7 views

மலை ரயிலில் பன்வாரிலால் புரோகித் பயணம்

நீலகிரி மாவட்டம் குன்னூரில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மலை ரயிலில் பயணம் செய்தார்.

10 views

"ஸ்டெர்லைட் போராட்ட தியாகிகளுக்கு வீரவணக்கம்" - ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுகின்ற வரையில் மக்கள் போராட்டம் ஓயாது என்று ம.தி.மு.க.பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

6 views

"கருத்துக்கணிப்பிற்கு பின்னால் பாஜக என்பதா?" - காங். தலைவர் அழகிரி கருத்துக்கு தமிழிசை மறுப்பு

கருத்துக்கணிப்பிற்கு பின்னால், பாஜக இருப்பதாக காங்கிரஸ் தலைவர் அழகிரி கூறிய கருத்திற்கு, தமிழக பாஜக தலைவர் தமிழிசை மறுப்பு தெரிவித்துள்ளார்.

16 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.