மீனாட்சி அம்மன் - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண உற்சவம் - திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்

உலக நன்மைக்காக சேலம் மாவட்டத்தின் பிரசித்த பெற்ற திருத்தலங்களில் ஒன்றான அருள்மிகு ஸ்ரீ சக்தி காளியம்மன், ஸ்ரீ சக்தி மாரியம்மன்திருக்கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் மீனாட்சி அம்மன் - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெறுவது வழக்கம்.
மீனாட்சி அம்மன் - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண உற்சவம் - திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்
x
உலக நன்மைக்காக சேலம் மாவட்டத்தின் பிரசித்த பெற்ற திருத்தலங்களில் ஒன்றான அருள்மிகு ஸ்ரீ சக்தி காளியம்மன், ஸ்ரீ சக்தி மாரியம்மன்திருக்கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் மீனாட்சி அம்மன் - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். அதன்படி மங்கள இசையுடன் பஞ்ச வாத்தியங்கள் முழங்க, உற்சவம்  வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவையொட்டி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

எல்லையம்மன் கோயில் ஆடி மாத திருவிழா - பால்குடம் எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்



பூந்தமல்லிலையை அடுத்த குமணன்சாவடி ஊத்துக்காட்டு எல்லையம்மன் கோவில் 1008 பால்குட விழா சிறப்பாக நடைபெற்றது. கடந்த 27ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் ஆடி மாத விழா தொடங்கியது. விழாவின் 7ம் நாளான இன்று, பால்குட விழா  நடைபெற்றது. இதில் பக்தர்கள் ஊர்வலமாக கொண்டு சென்ற பால், அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. 

அருணாசல சுவாமி ஆடி அமாவாசை திருவிழா - கொடியேற்றத்துடன் விமர்சையாக துவக்கம்



தூத்துக்குடி மாவட்டம், ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா கொடியேற்றத்துடன் வெகு விமர்சையாக துவங்கியது. இன்று துவங்கி தொடர்ந்து 13 ஆம் தேதி வரை 12 நாட்கள் நடைபெறும், இத்திருவிழாவை ஒட்டி, சேர்மன் அருணாசல சுவாமிக்கு, பல்வேறு அபிஷேகங்கள், ஆராதனைகள் நடத்தப்பட்டன. திருவிழாவிற்கான கால்கோல் நடப்பட்டு, கொடியேற்றத்துடன் துவங்கிய விழாவில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

மாரியம்மன் கோயில் ஆடிப் பெருவிழா - தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்பு



சேலம் செவ்வாபேட்டை மாரியம்மன் கோயில் ஆடித் பெருவிழாவையொட்டி நடைபெற்ற தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
செவ்வாபேட்டை மாரியம்மன் கோயில் ஆடி பெரு விழா 31ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. 3-ம் நாளாள இன்று, தேர் வீதியுலா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதானை  நடைபெற்றது. 

சொரிமுத்து அய்யனார் கோயில் ஆடி திருவிழா தொடக்கம்



நெல்லை மாவட்டம் பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள சொரிமுத்து  அய்யனார் கோயில் ஆடி மாத திருவிழா வெகு விமரிசையாக தொடங்கியது. இதனையொட்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

சிறுவாச்சூர் அருள்மிகு ஊர்சுத்தியான் ஆடி முப்பூசை விழா 



பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூர் அருள்மிகு ஊர்ச்சுத்தியான் திருக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த ஆலயம், எல்லை காவல் தெய்வமாக விளங்கி வருகிறது.  ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் முப்பூசை விழா நடைபெறும். இந்தாண்டுக்கான விழா இன்று நடைபெற்றது. இதில் உடுக்கை அடித்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. திரளான பக்தர்கள் பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு நடத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்