தாய்ப்பாலின் மகத்துவத்தை உணர்த்தும் "தாய்ப்பால் வாரம்"

உலகம் முழுவதும் தாய்ப்பால் வாரம் அனுசரிக்கப்பட்டுவரும் நிலையில், இந்திய அளவில் புகழ்பெற்றுள்ள தமிழத்தின் தாய்ப்பால் வங்கிகள் குறித்த சிறு தொகுப்பு.
தாய்ப்பாலின் மகத்துவத்தை உணர்த்தும் தாய்ப்பால் வாரம்
x
ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் ஏழாம் தேதி வரை உலக தாய்ப்பால் தினமாக கொண்டாடப்படுகிறது. தாய்ப்பாலின் மகத்துவம் மற்றும் அவசியம் குறித்து பலரும் அறிந்திருப்போம்.எனவே இந்த தொகுப்பில், தாய்ப்பால் வங்கிகளின் அவசியம் , பணிகள் மற்றும் தமிழக தாய்ப்பால் வங்கிகள் குறித்து பார்க்கலாம்.

பல தாய்மார்கள் மத்தியில், தாய்ப்பாலை அடுத்த குழந்தைகளுக்கு கொடுத்தால், தன் குழந்தைக்கு தாய்ப்பால் சுரக்காது என்ற மூட நம்பிக்கை நிலவி வருகிறது. ஆனால் தாய்ப்பால் தானமாக கொடுப்பதால், பால் அதிகமாக சுரக்கும் என்பதே உண்மை என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். 

தாய்ப்பால் கொடுக்க முடியாத நிலையில் இருந்தபோது, தானமாக கிடைத்த தாய்ப்பால் மூலம்   தங்கள் குழந்தைகள் காப்பாற்றப்பட்டதாக நெகிழ்ச்சியுடன் கூறும் தாய்மார்கள், தற்போது உடல்நிலை தேறியதால், நாங்களும் தானமாக தாய்ப்பால் கொடுக்க முன்வந்துள்ளோம் என பெருமையாக கூறுகின்றனர்.

தாய்ப்பால் சுரக்காது, தன் குழந்தைக்கு பால் இருக்காது, நோய் தோற்று ஏற்படும் என எத்தனை  பொய்யான வதந்திகள் பரவினாலும்,  தமிழக தாய்மார்களின் தாயுள்ளம் அவற்றை எல்லாம் வென்று விட்டது என்பதை அமைச்சர் விஜயபாஸ்கர் சில புள்ளிவிவரங்கள் மூலம் எடுத்துரைக்கிறார்.


Next Story

மேலும் செய்திகள்