மதுரையில் நியூட்ரினோ உணர்கருவி மாதிரி அமைப்பு - அனைவரும் காண வருமாறு அழைப்பு

மதுரையில் அமைக்கப்பட்டுள்ள நியூட்ரினோ ஆய்வுக்கூடத்தின் ​உணர்கருவியை காண வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மதுரையில் நியூட்ரினோ உணர்கருவி மாதிரி அமைப்பு - அனைவரும் காண வருமாறு அழைப்பு
x
மதுரையில் அமைக்கப்பட்டுள்ள நியூட்ரினோ ஆய்வுக்கூடத்தின் ​உணர்கருவியை காண வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அறிவியல் தொடர்பு ஒருங்கிணைப்பாளர் விஞ்ஞானி வெங்கடேஸ்வரன் வெளியிட்டுள்ள அழைப்பில், தேனியில் அமையவுள்ள நியூட்ரினோ அறிவியல் ஆய்வு கூடத்தில் கட்டமைக்கப்படவுள்ள உணர்கருவியின் மாதிரி மதுரை நாகமலைப்புதூரில் சிறு உணர்கருவியாக உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை காண பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த குறிப்பாக இயற்பியல் துறையை சேர்ந்த மாணவர்கள் வந்து கொண்டிருப்பதாகவும், உணர்கருவியின் அறிவியல் உண்மைகளை அவர்கள் தெரிந்துகொள்வதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழக கல்வி நிறுவனங்களோடு உயர்கல்வி தொடர்பை ஏற்படுத்தவும், மாணவர்கள் இங்கு ஆய்வு நடத்தவும் வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

டாடா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனம் உட்பட நியூட்ரினோ ஆய்வு கூட்டமைப்பு முற்றிலும் அறிவியல் மற்றும் உயர்கல்வி சார்ந்து இயங்கும் அமைப்பு என்றும், அறிவியல், உயர்கல்வியில் பங்கு கொள்வதே நிறுவனத்தின் முதல் நோக்கம் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்