திருப்பதியில் தரிசனம் செய்த சரத்குமார்

திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்த சமத்துவமக்கள் கட்சி தலைவர் சரத்குமார், தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல் நலம் பெற பிரார்த்தனை செய்தார்
திருப்பதியில் தரிசனம் செய்த சரத்குமார்
x
சரத்குமார், அவரின் மனைவி ராதிகா இருவரும் இன்று திருப்பதி கோவிலில் ஏழுமலையானை தரிசனம் செய்தனர். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த சரத்குமார், தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல் நலம் பெறுவதற்காக ஏழுமலையானிடம் வேண்டிக் கொண்டதாக தெரிவித்தார். 
தொடர்ந்து கேள்விகளுக்கு பதிலளித்த சரத்குமார்,  அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தேர்தலையொட்டி கட்சியை பலப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறினார். கூட்டணி குறித்து தேர்தல் சமயத்தில் சூழ்நிலைக்கு ஏற்ப முடிவு செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்