இன்றைய நவீன காலத்திலும் இயங்கி வரும் டென்ட் கொட்டாய்..

வேலூர் அருகே 25 ரூபாய் கட்டணத்தில் புதுப்படங்களை பார்க்க வழிவகை செய்கிறது அங்கு செயல்படும் டென்ட் கொட்டாய்...
இன்றைய நவீன காலத்திலும் இயங்கி வரும் டென்ட் கொட்டாய்..
x
வேலூர் மாவட்டம் பூட்டுத்தாக்கு பகுதியில் இருக்கிறது டென்ட் கொட்டாய்.ஏசி, டிடிஎஸ் எபெக்ட் என நவீன வசதிகள் எல்லாம் இங்கு இருக்காது. ஆனால் நம் முந்தைய தலைமுறையின் நினைவுகளை, சுமந்து கொண்டு நிற்பது தான் இந்த திரையரங்குகளை இன்றும் உயிர்ப்போடு வைத்திருப்பதற்கு காரணம்.

என்னதான் வெல்வெட் இருக்கைகளில் அமர்ந்து படம் பார்த்தாலும், மணலை மேடாக்கி அதில் அமர்ந்து படம் பார்ப்பது ஒரு அலாதியான இன்பம் தான். அப்படி ஒரு அனுபவத்தை பெற இன்றும் மக்கள் கூட்டம் அதிகமாகவே இந்த திரையரங்கிற்கு வருகிறது. 

35 வருடங்களாக இந்த திரையரங்கம் செயல்பட்டு வரும் நிலையில் காலத்திற்கேற்ப சில மாற்றங்களையும் செய்து வருகிறார்கள். வேலூரை சுற்றி உள்ள 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இந்த தியேட்டருக்கு வருவது வாடிக்கையாக உள்ளது. 

மாலை மற்றும் இரவு என 2 காட்சிகளே உள்ளதால் எப்போதும் மக்கள் கூட்டமும் இங்கு கணிசமாகவே உள்ளது. 25 ரூபாய், 35 ரூபாய்க்கு புதுப்படங்களை பார்க்க முடியும் என்பதே இந்த திரையரங்கின் சிறப்பம்சம். இதனை ஒரு சேவை நோக்கத்துடன் செயல்படுத்தி வருவதாக கூறுகிறார் திரையரங்க உரிமையாளர் கணேசன்.

காலத்தின் கட்டாயம் கருதி நவீனத்திற்கு மாறினாலும், அவ்வப்போது பாரம்பரியங்களை புதுப்பிக்க வேண்டியது நம் கடமையும் கூட. 


Next Story

மேலும் செய்திகள்