ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்ட தமிழக அரசின் அரசாணைக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் தடை விதிக்க மறுப்பு...
பதிவு : ஜூலை 30, 2018, 02:16 PM
மாற்றம் : ஜூலை 30, 2018, 03:49 PM
ஆலை பராமரிப்பு பணிக்கு அனுமதிக்க வேண்டும் என்ற வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கை நிராகரிப்பு.
தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என  தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணைக்கு இடைக்கால தடை விதிக்க கோரி, வேதாந்தா குழுமம், தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு, நீதிபதி ஏ.கே.கோயல் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஸ்டெர்லைட் ஆலையை மூட கோரி, 5 உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் எனவும், வேதாந்தா குழுமம் தரப்பில் கோரப்பட்டது. இதற்கு தமிழக அரசு சார்பில் கடும் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது. மேலும், ஆலையில் சல்ப்ஃயூரிக் ஆசிட், உள்ளிட்ட ரசாயனங்கள் உள்ளதாகவும், அதனை அப்புறப்படுத்த வேண்டும் எனவும் வேதாந்தா குழுமம் சார்பில் வாதிடப்பட்டது. இதற்கும் தமிழக அரசு தரப்பு கடும் ஆட்சேபம் தெரிவித்தது.  இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், அரசின் உத்தரவுக்கு தற்போது இடைக்கால தடை விதிக்க முடியாது என கூறி, வருகிற ஆகஸ்ட் மாதம் 9 ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தனர். 


தொடர்புடைய செய்திகள்

ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் ஓய்வுபெற்ற நீதிபதி விசாரிக்க உத்தரவிட்டதை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு

ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி விசாரிக்க உத்தரவிட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.

62 views

ஸ்டெர்லைட் விவகாரம் : தமிழக அரசின் கோரிக்கை நிராகரிப்பு

ஸ்டெர்லைட் விவகாரத்தில் வேதாந்தா நிறுவனத்தின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கை நிராகரிப்பு

428 views

பிற செய்திகள்

சிலைகள் கரைப்பது தூய்மை இந்தியா திட்டத்திற்கு எதிரானது - எக்ஸ்னோரா நிர்மல்

கடலில் விநாயகர் சிலைகளை கரைப்பதால் சுற்றுச்சூழல் மாசுபாடுவதாகவும், இது தூய்மை இந்தியா திட்டத்திற்கு எதிரானது என சுற்றுச்சூழல் ஆர்வலர் எக்ஸ்னோரா நிர்மல் தெரிவித்துள்ளார்.

65 views

மனநலம் குன்றிய சிறுமியை கடத்தி தொடர் பாலியல் பலாத்காரம் செய்த மூன்று பேர் கைது

காஞ்சிபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரியை அடுத்த ஊனமாஞ்சேரியில், 13 வயது மனநலம் குன்றிய சிறுமியை கடத்தி தொடர் பாலியல் பலாத்காரம் செய்துவந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

8 views

கும்பகோணம் ஜெகன்னாத பெருமாள் கோவிலின் சிறப்புகள்...

108 திவ்ய தேசங்களுள் ஒன்றான கும்பகோணம் ஜெகன்னாத பெருமாள் கோயில் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்..

65 views

சென்னைக்கு தேவையான குடிநீர் வழங்குக - தென்னிந்திய முதல்வர்கள் மாநாட்டில் துணை முதல்வர் வலியுறுத்தல்

தென்மாநில முதலமைச்சர்கள் மாநாட்டில், துணை முதல்வர் சென்னைக்கு தேவையான குடிநீர் வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

67 views

ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு - ஒத்திவைக்க தமிழகம் கோரிக்கை

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் வருகிற 22 முதல் 24ஆம் தேதி வரை ஆய்வு செய்ய உள்ளதை ஒத்தி வைக்குமாறு மத்திய மாசு காட்டுப்பாட்டு வாரியத்திற்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது.

24 views

கண்காணிப்பு கேமிராவை திருப்பி வைத்துவிட்டு கொள்ளையடித்த கொள்ளையர்கள்

திருச்சியில் கண்காணிப்பு கேமிராவை திருப்பி வைத்துவிட்டு, நூதன முறையில் கொள்ளை சம்பவம் அரங்கேறியுள்ளது.

28 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.