நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பொங்கலாயி அம்மன் கோயில் விழா

பழமைவாய்ந்த பொங்கலாயி அம்மன் கோயில் கொடை விழாவில் ஆண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் அதிசயம்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பொங்கலாயி அம்மன் கோயில் விழா
x
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே மலையாம்பட்டி கிராமத்தில் பழமைவாய்ந்த பொங்கலாயி அம்மன் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆடி மாதம் 3ஆம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் விழாவில், 150-க்கும் மேற்பட்ட கிடா வெட்டப்பட்டு, பொங்கல் வைத்து சமபந்தி விருந்து நடைபெறுவது வழக்கம். இந்த விழா நடைபெற்ற போது, பெண்கள் யாரும் கலந்து கொள்வதில்லை. இதற்கு காரணம், கடந்த 200 ஆண்டுகளுக்கு முன்பு விழா சமயத்தில் கனமழை பெய்ததால்,  பெண் ஒருவர் கிணற்றில் விழுந்துள்ளார். அப்போது முதல் பெண்கள் விழாவில் பங்கேற்பதில்லை என்று கூறப்படுகிறது. இந்தக் கோயிலில் வேண்டுதல் வைத்தால் திருமண தடை நீங்கும் என்றும், குழந்தை பாக்கியம், கடன் தொல்லையில் இருந்து விடுபடுதல் போன்றவை நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்