ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது தொடர்பாக அப்பல்லோ மருத்துவமனையில் ஆய்வு

ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது தொடர்பாக, அப்போலோ மருத்துவமனையில் ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் ஆய்வு நடத்தியது.
ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது தொடர்பாக அப்பல்லோ மருத்துவமனையில் ஆய்வு
x
அப்போலோ மருத்துவமனையில் நேற்று இரவு 7 மணிக்கு தொடங்கிய ஆய்வு 7.45 வரை நடைபெற்றது. இதில் ஆணையத்தின் வழக்கறிஞர்கள் நிரஞ்சன், பார்த்தசாரதி மற்றும் சசிகலா தரப்பில் இருந்து இரண்டு வழக்கறிஞர்கள் பங்கேற்றனர். ஜெயலலிதா சிகிச்சை பெற்ற கிரிட்டிக்கல் கேர் யூனிட் அவசர சிகிச்சை பிரிவு மற்றும் அறை எண் 2008, செவிலியர் வார்டின் உட்பகுதி மற்றும் கண்ணாடி அறையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.அமைச்சர்கள் மற்றும் பிரமுகர்கள் தங்கியிருந்த அறை  அப்போலோ மருத்துவர்கள் ஜெயலலிதா உடல் நிலை குறித்து விளக்கிய அறை ஆகியவற்றை குழுவினர் பார்வையிட்டனர் மூன்றாம் தளத்தில் சசிகலா மற்றும் அவரின் உறவினர்கள் தங்கிய அறை மற்றும், ஜெயலலிதாவிற்கு உணவு தயார் செய்த  சமையல் அறையையும் ஆய்வு செய்தனர். இதனிடையே நேற்று இரவு 8.15 மணி முதல், 8.45 வரை தீபா மற்றும் அவரது வழக்கறிஞர் பார்வையிட அனுமதி வழங்கப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்