சர்வதேச புலிகள் தினம் இன்று கடைபிடிப்பு

சர்வதேச புலிகள் தினமான இன்று அவற்றை அழிவிலிருந்து பாதுகாப்பது குறித்து ஒரு செய்தித்தொகுப்பு.
சர்வதேச புலிகள் தினம் இன்று கடைபிடிப்பு
x
உலகில் உள்ள புலிகளை பாதுகாக்க ஆண்டு தோறும் ஜூலை 29ந்தேதி சர்வதேச புலிகள் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புலிகள் உள்ள நிலையில் அவற்றின் எண்ணிக்கையை இருமடங்காக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.இந்தியாவில் 50 புலிகள் காப்பகங்கள் உள்ள நிலையில் தமிழகத்தில் களக்காடுமுண்டந்துறை, முதுமலை, ஆனைமலை, சத்தியமங்கலம் ஆகிய 4 இடங்களிகளில் புலிகள் காப்பகங்கள் உள்ளன. ஆயிரத்து 411 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் மாயாறு ஓடும் அடர்ந்த  வனப்பகுதியில்   உள்ளது. புலிகள் காப்பகங்களில் தானியங்கி கேமராக்கள் பொருத்தப்பட்டு புலிகள் கண்காணிக்கப்படுகின்றன. 

Next Story

மேலும் செய்திகள்