நவீன பீரங்கிகள், என்ஜின்கள் ராணுவத்தில் சேர்ப்பு - நிர்மலா சீதாராமன்

இந்திய ராணுவத்திற்கு தேவையான அனைத்து பொருட்களும் இந்தியாவிலேயே தயாரிக்க வேண்டும் என மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
நவீன பீரங்கிகள், என்ஜின்கள் ராணுவத்தில் சேர்ப்பு - நிர்மலா சீதாராமன்
x
சென்னை ஆவடியில் உள்ள டேங்கர் தொழிற்சாலையில் என்ஜின் தயாரிப்பு பிரிவில் 'மேக் இன் இந்தியா' திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட அதிநவீன ராணுவ என்ஜின்களை, மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்திய ராணுவத்திற்கு அர்ப்பணித்தார். 

இந்த என்ஜின்கள், ராணுவத்தில் உள்ள பீஷ்மா பீரங்கிகளான டி - 72 மற்றும் டி - 90 ஆகியவற்றுக்காக தயாரிக்கப்பட்டவை. இவை ஆயிரம் குதிரை திறன் கொண்டவை. இதன் மதிப்பு 42 லட்ச ரூபாய் ஆகும். 

இவற்றை ராணுவத்துக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சியில் பேசிய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், நாட்டின் பாதுகாப்பு சார்ந்த பொருட்களை இறக்குமதி செய்வதை தவிர்க்க வேண்டும் என்றார். பாதுகாப்புக்கான பொருட்களை உற்பத்தி செய்ய நம்மால் முடியும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். 


  


Next Story

மேலும் செய்திகள்