அப்துல்கலாமின் 3ஆம் ஆண்டு நினைவு தினம்

அப்துல்கலாமின் 3ஆம் ஆண்டு நினைவு தினம் மாணவர்கள் கலாம் படத்திற்கு மலரஞ்சலி
அப்துல்கலாமின் 3ஆம் ஆண்டு நினைவு தினம்
x
மாணவர்கள் கலாம் படத்திற்கு மலரஞ்சலி



நாகர்கோவிலில் உள்ள தனியார் பள்ளி மாணவர்கள் அப்துல் கலாம்  படத்திற்கு, மலர் தூவி  மரியாதை செய்தனர். அப்துல்கலாம் நினைவு நாளில், அவர் கண்ட கனவை நனவாக்குவோம் என்றும் உறுதி மொழி எடுத்தனர்.

அப்துல்கலாம் நினைவு நாள் - குடும்பத்தினர் அஞ்சலி


முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் அப்துல்கலாமின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. ராமேஸ்வரத்தில் உள்ள அவரது நினைவிடத்தில், அப்துல்கலாமின் சகோதரர் முகமது முத்து மீரான் மரைக்காயர் தலைமையில் அவரது குடும்பத்தினர்  அஞ்சலி செலுத்தினர். 

இன்று அப்துல் கலாமின் நினைவு தினம்...
 

அப்துல் கலாம் நினைவு தினத்தை முன்னிட்டு, அறிவுசார் மையம் அமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மாணவர்கள் பயன்பெறும் வகையில் அறிவுசார் மையம் அமைக்கப்படும் என அறிவித்திருந்த நிலையில், அதற்கான பணிகள் இதுவரை நடைபெறாதது ஏமாற்றம் அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். 

கலாம் நினைவிடத்தில் அமைச்சர் மணிகண்டன் அஞ்சலி 

 


கலாமின் நினைவு தினத்தை முன்னிட்டு,  அவரது நினைவிடத்தில்,  தமிழக அரசு சார்பில், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் அஞ்சலி செலுத்தினார்.

"கலாம் கண்ட கனவை இளைஞர்கள் நனவாக்குவார்கள்"-தினகரன்



அப்துல் கலாம் நினைவிடத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப் பொதுச் செயலாளர் தினகரன்  அஞ்சலி செலுத்தினார். இதனைத் தொடர்ந்து கலாமின் சகோதரர் முகமது முத்து மீரானை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், கலாம் கண்ட கனவை இளைஞர்கள் நிறைவேற்றுவார்கள் என நம்பிக்கையுள்ளதாக தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்