கருணாநிதி உடல்நிலை பற்றி ஸ்டாலினிடம் விசாரித்த குடியரசுத் தலைவர்

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து தொலைபேசி வாயிலாக விசாரித்துள்ளார்.
கருணாநிதி உடல்நிலை பற்றி  ஸ்டாலினிடம் விசாரித்த குடியரசுத் தலைவர்
x
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து, ஸ்டாலினிடம், தொலைபேசி வாயிலாக விசாரித்துள்ளார்.
 அப்போது,  கருணாநிதி பூரண உடல் நலம் பெற்று மீண்டு வர வேண்டும் என தான் இறைவனை வேண்டிக் கொள்வதாக ராம்நாத் கோவிந்த் கூறியதாக
 தெரிகிறது. இதேபோல் குடியரசு துணை தலைவர் வெங்கய்ய நாயுடு, கருணாநிதி உடல் நிலை குறித்து தொலைபேசி மூலம்  ஸ்டாலினுடன் கேட்டறிந்தார். 


கருணாநிதி உடல்நிலை - ஸ்டாலின், கனிமொழியிடம் கேட்டறிந்தார் பிரதமர்திமுக தலைவர் கருணாநிதி விரைவில் பூரண நலம் பெற பிரார்த்திப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக தனது சமூகவலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், கருணாநிதியின் உடல் நலம் குறித்து, ஸ்டாலின் மற்றும் கனிமொழி ஆகியோரிடம் கேட்டறிந்ததாகவும், எந்த நேரத்திலும் உதவ தயாராக இருப்பதாகஅவர்களிடம்உறுதியளித்துள்ளதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். 

ஸ்டாலினுடன் தொலைபேசி மூலம் ராகுல் பேச்சு கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரித்தார் 

திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, நலம் விசாரித்துள்ளார். ஸ்டாலினுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய ராகுல், கருணாநிதி உடல் நலம் மற்றும் அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை விபரங்களை கேட்டு அறிந்ததாக டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
Next Story

மேலும் செய்திகள்