பவானி சாகர் நீர்த்தேக்க பகுதியில் நீரில் மூழ்கிய பாலம், இணைப்பு சாலை...

பவானி சாகர் அணை நீர்த்தேக்க பகுதியில் பாலமும், இணைப்பு சாலையும் நீரில் மூழ்கியதால் மாற்று வசதியாக பரிசல் பயனம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
பவானி சாகர் நீர்த்தேக்க பகுதியில் நீரில் மூழ்கிய பாலம், இணைப்பு சாலை...
x
தென்மேற்கு பருவமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் பெய்த மழையால் பில்லூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. பில்லூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் பவானி சாகர் அணையை அடைந்தது. இந்நிலையில் லிங்காபுரம் அருகே காந்தையாற்றின் குறுக்கே அமைந்துள்ள பாலம் நீர்த்தேக்க பகுதியில் கட்டப்பட்டதால், தற்போது பாலம் முழுவதும் தண்ணீரில் மூழ்கியுள்ளது. அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் பாலத்தின் இணைப்பு சாலையும் தண்ணீரில் மூழ்கி வருகிறது. பாலம் தண்ணீரில் மூழ்கியதால் கரையோர பகுதிகளில் உள்ள பழங்குடியின் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்