மின்சார ரயில்களில் அடிக்கடி நிகழும் விபத்துகளை தவிர்க்க என்ன செய்யலாம்?

மின்சார ரயில்களில் அடிக்கடி நிகழும் விபத்துகளை தவிர்க்க என்ன செய்யலாம்?
மின்சார ரயில்களில் அடிக்கடி நிகழும் விபத்துகளை தவிர்க்க என்ன செய்யலாம்?
x
சமீபத்தில் சென்னை பரங்கிமலையில் நடந்த மின்சார ரயில் விபத்தில் நான்கு இளைஞர்கள் உயிரிழந்தனர். கூட்ட நெரிசலால் படிக்கட்டுகளில் பயணித்தபோது, இந்த கோர சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதற்கு ரயில் பெட்டிகளில் கதவுகள் இல்லாமல் இருப்பதும் முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. வெளிநாடுகளுடன் ஒப்பிடும்போது, அங்கு கதவு இல்லாத ரயில்களை பார்க்க முடியாது என்றும், டோக்கியோ போன்ற நகரங்களில் ரயில் கதவுகளை மூட ஆட்களை நியமித்து இருப்பதாகவும் கூறுகிறார், சென்னை ஐஐடியில் பணிபுரியும் இணை பேராசிரியர் கீதகிருஷ்ணன். விபத்துகளை தவிர்க்க, அடுத்து வரும் ரயிலின் நேரம்,  எவ்வளவு துாரத்தில் வந்து கொண்டிருக்கிறது என்பதை அறியும் தகவலை பயணிகளுக்கு ஒரு செயலி (ஆப்) மூலம் தெரியப்படுத்தி விட முடியும். தெற்கு ரயில்வே கேட்டுக் கொண்டால் இந்த தொழில்நுட்ப வசதியை செய்து கொடுக்க தயாராக இருக்கிறோம் என்றும் அவர் தெரிவித்தார். "பீக் அவர்" என்று சொல்லக்கூடிய காலை, மாலை நேரங்களில் தாம்பரம் - சென்னை கடற்கரை இடையே இயக்கப்படும் மகளிர் ரயிலில் பாதியை ஆண்கள் பயணிக்கவும் ஒதுக்க வேண்டும் என, ரயில்வே ஊழியர் சங்கத்தினர் கோரிக்கை விடுக்கின்றனர்.



Next Story

மேலும் செய்திகள்