"99.9% மருத்துவமனையில் பிரசவம் நடக்கக்கூடிய மாநிலம் தமிழகம்" - அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை எழும்பூர் அரசு பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மருத்துவமனையில், மகப்பேறு இயல் மற்றும் மகளிர் நோய் மருத்துவ இயல் மையத்தின் 175-வது ஆண்டு விழா கொண்டாட்டத்தை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.
99.9% மருத்துவமனையில் பிரசவம் நடக்கக்கூடிய மாநிலம் தமிழகம் - அமைச்சர் விஜயபாஸ்கர்
x
சென்னை எழும்பூர் அரசு பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மருத்துவமனையில், மகப்பேறு இயல் மற்றும் மகளிர் நோய் மருத்துவ இயல் மையத்தின் 175-வது ஆண்டு விழா கொண்டாட்டத்தை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். தொடர்ந்து கருவுற்றல் மையம் , ரேடியோ அதிர்வெண் கண்டறிதல் மையம், உள்ளிட்டவற்றையும் தொடங்கி வைத்தார். பின்னர் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர் எந்த தனியார் மருத்துவமனையையும் அரசு சேவையோடு ஒப்பிட முடியாது என்றார்.  99 புள்ளி 9 சதவீதம் மருத்துவமனையில் பிரசவம் நடக்கக்கூடிய மாநிலம் தமிழகம் தான் என்றும் தெரிவித்தார். 'சர்க்கரையில் அக்கறை' என்னும் பிரசவம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்