கேரள முதலமைச்சருடன் வைகோ சந்திப்பு - நியூட்ரினோ திட்டத்தை எதிர்க்க நேரில் கோரிக்கை

தமிழகத்தில் உள்ள தேனி மாவட்டத்தில் அமைய உள்ள நியூட்ரினோ திட்டத்தை எதிர்க்க வேண்டும் என்று, கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை இன்று நேரில் சந்தித்து ம.தி.மு.க. பொதுச் செயலாளர் கடிதம் அளித்தார்.
கேரள முதலமைச்சருடன் வைகோ சந்திப்பு - நியூட்ரினோ திட்டத்தை எதிர்க்க நேரில் கோரிக்கை
x
தமிழகத்தில் உள்ள தேனி மாவட்டத்தில் அமைய உள்ள நியூட்ரினோ திட்டத்தை எதிர்க்க வேண்டும் என்று, கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை இன்று நேரில் சந்தித்து ம.தி.மு.க. பொதுச் செயலாளர் கடிதம் அளித்தார். பின்னர் திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த திட்டத்தால் இடுக்கி, முல்லை பெரியாறு அணைகள் உடையும் ஆபத்து உள்ளதாக தெரிவித்தார். இதுதொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதாலா, முன்னாள் முதலமைச்சர்கள் அச்சுதானந்தன், மற்றும் உம்மன்சாண்டியை அவர்களது இல்லத்தில் சந்தித்து கடிதம் அளித்ததாகவும் வைகோ கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்