பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் கலந்தாய்வு துவங்கியது : மாணவர்கள் விரும்பும் கல்லூரிகளை பதிவு செய்யலாம்

தமிழகத்தில்,முதல் முறையாக ஆன்லைன் மூலமான பொறியியல் சேர்க்கை கலந்தாய்வு இன்று துவங்கியது.
பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் கலந்தாய்வு துவங்கியது : மாணவர்கள் விரும்பும் கல்லூரிகளை பதிவு செய்யலாம்
x
நடப்பாண்டில் பொறியியல் படிப்புகளில் சேர,ஒரு லட்சத்து 10 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்து உள்ளனர். இதில்,190 முதல் 200 வரை கட்-ஆப் மதிப்பெண் இருக்கும் மாணவர்களுக்கான கலந்தாய்வு,நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கியது.நள்ளிரவே 58 மாணவர்கள்,தாங்கள் விரும்பும் கல்லூரிகளை தேர்வு செய்து பதிவு செய்துள்ளனர்.மாணவர்கள்,அண்ணா பல்கலைக்கழக இணையத்தளத்திற்குள் சென்று,தாங்கள் விரும்பும் கல்லூரிகளின் பட்டியலை 27ஆம் தேதி மாலை 5 மணி வரை வரிசைபடுத்தலாம்.தற்காலிக ஒதுக்கீட்டு ஆணை 29ஆம் தேதி ஒதுக்கீடு செய்யப்படும். கம்ப்யூட்டர் வசதியில்லாத கிராமப்புற மாணவர்களுக்கு உதவும் வகையில்,மாநிலம் முழுவதும் அண்ணா பல்கலைக்கழகம் சார்பில்,42 உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

Next Story

மேலும் செய்திகள்