"அம்ருதா தாக்கல் செய்த ஆவணம் போலி" - உயர்நீதிமன்றத்தில் அரசு தரப்பு திட்டவட்டம்

ஜெயலலிதாவின் மகள் என கூறி வழக்கு தொடர்ந்த பெங்களுரு இளம்பெண் அம்ருதா தாக்கல் செய்த ஆவணங்கள் போலியானவை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதிட்டது.
அம்ருதா தாக்கல் செய்த ஆவணம் போலி - உயர்நீதிமன்றத்தில் அரசு தரப்பு திட்டவட்டம்
x
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மகள் என கூறி, வழக்கு தொடர்ந்த பெங்களுரு இளம்பெண் அம்ருதா, தாக்கல் செய்த ஆவணங்கள் போலியானவை என்று, சென்னை உயர்நீதிமன்றத்தில், தமிழக அரசு வாதிட்டது. அம்ருதாவின் வழக்கு, நீதிபதி வைத்தியநாதன் முன்னிலையில், விசாரணைக்கு வந்தது. 

அப்போது, அம்ருதா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மகள் என்பதை நிரூபிக்க மரபணு சோதனைக்கு உத்தரவிட வேண்டும் என வாதிட்டார். அம்ரூதா, 1980 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிறந்ததாக கூறிய அரசு வழக்கறிஞர், இதற்கு ஒரு மாதத்திற்கு முன், ஜெயலலிதா பங்கேற்ற நிகழ்ச்சியின் வீடியோ காட்சியை, நீதிபதியிடம் ஒப்படைத்தார். 

1996 முதல் 2016 வரை, பல தருணங்களில் ஜெயலலிதாவை சந்தித்ததற்கான ஓரு புகைப்பட ஆதாரங்களை கூட, அம்ருதாவால் தாக்கல் செய்ய முடியவில்லை என்றும் அரசு வழக்கறிஞர் வாதிட்டார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வைத்தியநாதன், விசாரணையை அடுத்த வாரத்திற்கு ஒத்திவைத்தார்.

Next Story

மேலும் செய்திகள்