சிபிஎஸ்இ-ல் இருந்து மாநில திட்டத்துக்கு மாறும் மாணவர்கள் தமிழ் தேர்வை எழுத வேண்டியதில்லை
பதிவு : ஜூலை 24, 2018, 08:10 PM
2023 - 24 கல்வியாண்டு வரை விலக்கு தொடரும் தமிழக அரசு அரசாணை வெளியீடு
* சிபிஎஸ்இ உள்ளிட்ட வேறு பாட திட்டங்களில் இருந்து, மாநில பாட திட்டத்தில் சேரும் மாணவர்களுக்கு தமிழ் தேர்வு எழுதுவதில் 2024 வரை விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

* கட்டாய தமிழ் கற்கும் சட்டப்படி, 10ம் வகுப்பு படிக்கும் அனைத்து மாணவர்களும், தமிழை ஒரு தேர்வாக எழுத வேண்டும் என்ற உத்தரவு அமலில் உள்ளது. 

* இதற்கிடையே, சிபிஎஸ்இ உள்ளிட்ட வேறு பாட திட்ட பள்ளிகளில், 1ம் வகுப்பிற்கு கட்டாயம் தமிழ் கற்கும் சட்டம் 2015-16 கல்வி ஆண்டில் அமல்படுத்தப்பட்டது. எனவே,  படிப்படியாக, 2024 - 25ம் கல்வியாண்டில் 10ம் வகுப்பு வரை தமிழை கற்று தேர்வை எழுத வேண்டும்.

* இந்நிலையில், வேறு மாநிலங்களில் இருந்து, தமிழகத்திற்கு குடிபெயரும் மாணவர்கள், மாநில  பாடதிட்ட பள்ளிகளில் 9,10ம் வகுப்புகளில் சேர, தமிழை தேர்வாக எழுத வேண்டியது இல்லை என, தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்காக, வரும் 2023-24 ம் கல்வியாண்டு வரை விலக்கு அளித்து, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
 
* எனினும், வேறு மாநிலங்களில் இருந்து, தமிழக சிபிஎஸ்இ பள்ளிகளில் சேர்ந்தால் இந்த விலக்கு பொருந்துமா என அரசாணையில் குறிப்பிடவில்லை. 

தொடர்புடைய செய்திகள்

"கொள்ளிடம் பாலத்தை ராணுவ உதவியுடன் சீரமைக்க வேண்டும்" - ஸ்டாலின் கோரிக்கை

கொள்ளிடம் பாலத்தை ராணுவ உதவியுடன் சீரமைக்குமாறு தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

707 views

ரூ.5000 கோடி பாக்கி தொடர்பான நிஷான் நிறுவனம் தொடர்ந்த வழக்கு - இருரப்புக்கும் இடையே சுமூக உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக தகவல்

தமிழக அரசு 5 ஆயிரம் கோடி ரூபாய் பாக்கி தொகை தர வேண்டும் என சர்வதேச நிறுவனங்களின் நீதிமன்றத்தில் நிஷான் கார் நிறுவனம் தொடர்ந்த வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், இருரப்புக்கும் இடையே சுமூக உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

191 views

69 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்கு - உச்சநீதிமன்றம் தள்ளுபடி

மருத்துவம் பொறியியல் கல்லூரிகளில் கூடுதல் இடங்களை ஏற்படுத்த முடியாது என்றும், 69 சதவீத இட ஒதுக்கீட்டு முறையை ரத்து செய்யக் கோரி வழக்கு தொடர்ந்து கொள்ளலாம் என உச்சநீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது.

83 views

தமிழகத்தில் தவிர்க்க இயலாத செலவுகள் அதிகரிப்பு- மத்திய கணக்கு தணிக்கைத் துறை தெரிவிப்பு

தமிழகத்தில் ஆண்டுக்கு ஆண்டு தவிர்க்க இயலாத செலவுகளுக்கு ஒதுக்கப்படும் நிதி அதிகரித்து கொண்டே வருவதாக மத்திய கணக்கு தணிக்கைத் துறை தெரிவித்துள்ளது.

203 views

"தாஜ்மகாலை மாசு பாதிப்பிலிருந்து காக்க வேண்டும்" - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

தாஜ்மகாலை மாசு பாதிப்பிலிருந்து பாதுகாக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

74 views

பிற செய்திகள்

நெல்லை காய்கனி சந்தையில் வரத்து குறைவு : விலை ஏற்றத்தால் விவசாயிகள் மகிழ்ச்சி

நெல்லை மாவட்டம் காவல்கிணறில் உள்ள காய்கறி சந்தையில் காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளதால் விலை அதிகரித்துள்ளது.

38 views

'சிபிஎஸ்இ தரம் எங்கே?' - நீதிபதி கிருபாகரன் கேள்வி

சிபிஎஸ்இ 2ஆம் வகுப்பு பொது அறிவு பாடத்தில் நடிகர் ரஜினி உள்ளிட்டவர்கள் பற்றி கேள்வி கேட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது, அதற்கு சிபிஎஸ்இ தரம் எங்கே என நீதிபதி கிருபாகரன் கேள்வி எழுப்பினார்.

122 views

கேரள வெள்ளம் எதிரொலி - நாமக்கல்லில் கறிக்கோழிகள் தேக்கம்

கேரளாவில் ஏற்பட்டுள்ள கனமழை வெள்ளத்தால், நாமக்கல் மாவட்டத்தில் கறிக்கோழிகள் தேக்கமடைந்துள்ளன

209 views

கேரள வெள்ளம் எதிரொலி : நாமக்கல்லில் 10 கோடி மதிப்பிலான முட்டைகள் தேக்கம்

கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தின் காரணமாக, நாமக்கல்லில் இருந்து கேரளாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட வேண்டிய முட்டைகள் தேக்கமடைந்துள்ளன.

29 views

"தமிழகம் மற்றும் புதுவையில் மழைக்கு வாய்ப்பு" - சென்னை வானிலை ஆய்வு மையம்

வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

202 views

முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் நகராட்சி ஊரக வளர்ச்சி தொடர்பான ஆலோசனை கூட்டம்

நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி துறையின் அடிப்படை வசதிகள் மற்றும் மேம்பாட்டு பணிகள் தொடர்பாக ஆலோசனை கூட்டம் சென்னையில் நடந்தது.

41 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.