வெட்டுவானம் எல்லையம்மன் : எல்லையம்மனை வணங்கினால் பிணிகள் தீரும் என நம்பும் பக்தர்கள்

ஆடி மாத அம்மன் கோயில்கள் வரிசையில் வேலூர் அருகே உள்ள வெட்டுவானம் எல்லையம்மன் கோயில் குறித்து பார்க்கலாம்...
வெட்டுவானம் எல்லையம்மன் : எல்லையம்மனை வணங்கினால் பிணிகள் தீரும் என நம்பும் பக்தர்கள்
x
வேலூர் மாவட்டம்  பள்ளிகொண்டா அருகே உள்ள வெட்டுவானம் கிராமத்தில் இருக்கிறது எல்லையம்மன் கோயில். மாரியம்மனாக ரேணுகாதேவி அவதாரம் எடுத்தபோது வெட்டுவானத்தில்தான் முதன்முதலாக அம்மன் எழுந்தருளினாள் என வரலாறு கூறுகிறது. 400 ஆண்டுகளுக்கு முந்தைய கோயில் இது என்பதால் இந்த ஊரின் சிறப்பே இங்கு வீற்றிருக்கும் அம்மன் தான் என்கிறார்கள் பக்தர்கள்... 

இந்த கோயிலின் சிறப்பு இங்கு இருக்கும் தல விருட்சமான வேப்பமரம் தான். கசப்பு சுவை துளியும் இல்லாத வேப்பிலை இங்கு மட்டுமே காணக்கிடைக்கும் அதிசயம்... அம்மை நோய் உள்ளவர்கள் இங்கு வந்து அம்பாளை வேண்டிக் கொண்டு கோயிலில் உள்ள தீர்த்தக் குளத்தில் குளித்தால் அம்மை நோய் அவர்களை நெருங்காது என்பதும் பக்தர்களின் நம்பிக்கை... 


Next Story

மேலும் செய்திகள்