"தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் வராது" -நீர்வளத்துறை இணை அமைச்சர் அர்ஜூன் ராம்
பதிவு : ஜூலை 24, 2018, 12:17 PM
மாற்றம் : ஜூலை 24, 2018, 12:19 PM
தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இருக்காது என்று மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சர் அர்ஜூன் ராம் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற மாநிலங்களவையில், திமுக,  உறுப்பினர் கனிமொழி எழுப்பிய கேள்விக்கு மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சர்  அர்ஜூன் ராம் மேக்வால்,எழுத்து மூலமாக பதில் அளித்துள்ளார். அதில், அணை பாதுகாப்பு மசோதா மூலம் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் வராது என்று தெரிவித்துள்ளார். அணைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக தான் இந்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார். ஒரு மாநிலத்தின் அதிகாரத்திற்கு  உட்பட்டு வேறு மாநிலத்தில் உள்ள அணைகள்,  ஏற்கனவே உள்ளது போல், அதிகாரம் உள்ள அந்தந்த மாநிலங்களின் கட்டுப்பாட்டில் தான் இருக்கும் என்று தெரிவித்துள்ளார். அணைகளை பாதுகாக்க,  மாநில அணை பாதுகாப்பு ஆணையம் செயல்பட்டு வருகிறது, அதற்கு பதில் தேசிய அணை பாதுகாப்பு ஆணையம்  கொண்டு வரப்பட உள்ளது. இதனாலும் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் அந்த பதிலில் அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.

பிற செய்திகள்

படிப்பை தொடர அரசு உதவ வேண்டும் - பெற்றோரை இழந்து தவிக்கும் பிள்ளைகள் கோரிக்கை

சத்தியமங்கலம் அருகே பெற்றோரை இழந்து தவிக்கும் பிள்ளைகள் மேற்படிப்பை தொடர தமிழக அரசு உதவ வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

33 views

" டெங்கு காய்ச்சலை தடுக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது " - அமைச்சர் விஜயபாஸ்கர்

டெங்கு காய்ச்சலை தடுக்க அரசு போதுமான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

27 views

"இந்து மதத்தை வளர்த்தவர் ராஜராஜ சோழன்" - ஹெச்.ராஜா பேச்சு

"ஒரு கோயில் கூட பூட்டப்பட்டது என்ற நிலை இருக்க கூடாது" - ஹெச்.ராஜா பேச்சு

387 views

பெரிய கோயிலில் 41 சிலைகள் மாற்றமா? - சிலைகள் தொன்மை குறித்து தொல்லியல் துறை ஆய்வு

தஞ்சை பெரிய கோயிலில், மாற்றப்பட்டதாக புகார் எழுந்த 41 சிலைகளின் உண்மை தன்மை குறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

36 views

"அய்யப்ப பக்தியுடைய பெண் தடுக்கப்படக்கூடாது என்பதே தீர்ப்பு" - ஆடிட்டர் குருமூர்த்தி

சபரிமலை விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும் என ஆடிட்டர் குருமூர்த்தி கூறியுள்ளார்.

25 views

பெற்றடுத்த குழந்தையை சில மணி நேரத்தில் கொன்ற தாய்

சென்னை வேளச்சேரி கன்னிகாபுரத்தில் சாலையோரம் இருந்த குப்பை தொட்டியில் கடந்த மாதம் 17 ஆம் தேதி பிறந்து சில மணி நேரம் ஆன பெண் குழந்தை பிணமாக கிடந்தது.

703 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.