மருத்துவ படிப்பில் சேர உதவிய மாவட்ட ஆட்சியர்... படிப்பு செலவுக்கான ரூ 17 லட்சத்தை ஏற்பாடு செய்தார்...

நீட் தேர்வில் வென்றும், குடும்ப வறுமை காரணமாக, பல் மருத்துவ படிப்பை கைவிடும் நிலையில் இருந்த பழங்குடியின மாணவி, தொடர்ந்து படிக்க, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் உதவி செய்துள்ளார்.
மருத்துவ படிப்பில் சேர உதவிய மாவட்ட ஆட்சியர்... படிப்பு செலவுக்கான ரூ 17 லட்சத்தை ஏற்பாடு செய்தார்...
x
திருவண்ணாமலை  மாவட்டத்தில், பழங்குடியினர் இனத்தை சேர்ந்த மாணவி சுமித்ரா, நீட் தேர்வில், 135 மதிப்பெண் பெற்றுள்ளார். அவருக்கு பல் மருத்துவ படிப்பில் சேர வாய்ப்பு கிடைத்தும், கல்லூரி கட்டணம் செலுத்த முடியாததால் மருத்துவ கனவை கைவிட்டார். 

இது குறித்து அறிந்த மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, மாணவி சுமித்ராவின் பல் மருத்துவ படிப்பிற்கு தேவையான 17 லட்சத்து 27 ஆயிரத்து 700 ரூபாய் கிடைக்க உதவி செய்துள்ளார். அரசு கல்வி உதவி தொகையாக 7 லட்சம் ரூபாயும், மற்ற நிறுவனங்கள் உதவியுடன் 10 லட்சம் ரூபாயையும் படிப்பு செலவிற்காக, மாணவியின் வங்கி கணக்கில் சேர்க்க, மாவட்ட ஆட்சியர் உதவி செய்துள்ளார்.  இதற்காக ஆட்சியருக்கு அந்த மாணவி நன்றி தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்