கண்மாய் தூர்வார கோரி மனு கொடுக்க வந்த எம்.எல்.ஏ. க்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம்

மதுரையில் கண்மாயை தூர்வார கோரி மனு கொடுக்க வந்த எம்.எல்.ஏ. க்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
கண்மாய் தூர்வார கோரி மனு கொடுக்க வந்த எம்.எல்.ஏ. க்கும்  போலீசாருக்கும் இடையே வாக்குவாதம்
x
மதுரையில் கண்மாயை தூர்வார கோரி மனு கொடுக்க வந்த எம்.எல்.ஏ. க்கும்  போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மதுரை மாநகராட்சியின் 25 மற்றும் 26 வது வார்டுக்கு உட்பட்ட சர்வேயர் காலனியில் பரசுராம பட்டி கண்மாய், கண்ணனேந்தல் கண்மாய் ஆகியவை தூர்வாரப்படாமல் உள்ளன. இது தொடர்பாக, மதுரை கிழக்கு தொகுதி எம்ல்ஏ மூர்த்தி தலைமையில் மதுரை ஆட்சியரிடம் மனு கொடுக்க சென்றனர். அப்போது எம்.எல்.ஏவோடு வந்தவர்களும் ஆட்சியரிடம் மனு கொடுக்க முயன்றனர். இதனால், போலீசாருக்கும் எம்.எல்.ஏ மூர்த்திக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்