"நெடுஞ்சாலை ஒப்பந்தங்களில் முறைகேடு இல்லை" - அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்
பதிவு : ஜூலை 23, 2018, 04:09 PM
தமிழக அரசின் நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தங்களில் முறைகேடு எதுவும் நடக்கவில்லை என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தங்களின் மூலம் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியானது. இது தொடர்பாக இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அமைச்சர் ஜெயக்குமார், அந்த  செய்திக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். செயல்பாட்டு அடிப்படையிலான பராமரிப்பு ஒப்பந்தம் என்ற முறையானது உலக வங்கியின் வழிகாட்டுதலின் படி நடைபெற்று வருவதாகவும், இதன் மூலம் சாலைகளை சீரமைத்தல், அகலப்படுத்துதல், மழை நீர் வடிகால் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். இதன் செயல்பாடுகளை மேலும் விரிவுபடுத்துவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாகவும், இந்த திட்டத்தின் மூலம் அரசுக்கு பணம் சேமிக்கப்பட்டு வருவதாகவும்,  இதில் எந்த முறைகேடும் நடக்கவில்லை எனவும் அமைச்சர் ஜெயக்குமார் குறிப்பிட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு

தமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.

1704 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

1859 views

பிற செய்திகள்

சென்னையில் நீதிமன்ற தடையை மீறி பறக்கும் மாஞ்சா பட்டங்கள்

சென்னையில் மாஞ்சா கயிறு தடவிய காற்றாடி பறக்க விடுவதற்கு நீதிமன்றம் தடைவிதித்துள்ள நிலையிலும் அது முற்றிலும் ஒழிக்கப்படவில்லையோ என்ற அச்சத்தை ஏற்படுத்தும் சம்பவங்கள் சமீபத்தில் அரங்கேறியுள்ளது.

39 views

உயர்நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார் ஹெச்.ராஜா...

காவல் மற்றும் நீதித்துறை குறித்து அவதூறாக பேசிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரினார் ஹெச்.ராஜா.

98 views

ஊழல் புகார் விவரங்களை அளிக்க பிரதமர் அலுவலகத்துக்கு மத்திய தகவல் ஆணையம் உத்தரவு

உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த வனஅதிகாரி சஞ்சீவ் சதுர்வேதி தகவல் பெறும் உரிமை சட்டத்தின்கீழ் பிரதமர் அலுவலகத்திடம் சில தகவல்களைக் கேட்டு மனுத்தாக்கல் செய்திருந்தார்.

22 views

குஜராத்தில் களைகட்டிய கேரள திருவிழா

குஜராத்தில் உள்ள அய்யப்பன் கோயிலில் நிலம்பூர் பட்டு திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.

46 views

தியாகராஜர் கோயிலில் 2-வது நாளாக ஆய்வு

திருவாரூர் தியாகராஜர் கோவிலில் 2வது நாளாக இன்று சிலை கடத்தல் தடுப்பு பிரிவு மற்றும் தொல்லியல் நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

17 views

ரூ.4-ஐ தாண்டும் முட்டை விலை

முட்டையின் தேவை அதிகரிப்பால் அதன் விலை நான்கு ரூபாய்க்கு மேல் உயரும் என நாமக்கல் கோழிப்பணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

17 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.