மாதம் 50,000 சம்பாதிக்கும் கூலி தொழிலாளிகள்...

பள்ளம் தோண்டும் கூலி தொழிலாளர்கள் மாதம் 50 ஆயிரம் ரூபாய் வரை சம்பாதிக்கின்றனர் என்றால் நம்ப முடிகிறதா...?
மாதம் 50,000 சம்பாதிக்கும் கூலி தொழிலாளிகள்...
x
நெடுஞ்சாலைகளில் செல்லும்போது, சாலையோரம் கூலி தொழிலாளர்கள் பள்ளம் தோண்டிக்கொண்டிருப்பதை பார்த்திருப்போம்...வெயிலில் கடினமாக உழைக்கும் அவர்களை பரிதாபம் கலந்த கண்களுடன் அவர்களை கடந்து சென்றிருப்போம்...இந்த தொழிலாளர்கள் மாதம் 50 ஆயிரம் ரூபாய் வரை சம்பாதிக்கின்றனர் என்றால் நம்ப முடிகிறதா...? ஆனால் அது தான் உண்மை... 

ஆண்கள் மட்டுமல்லாமல் பெண்களும் கூட இந்த கடினமான வேலையில் ஈடுபட்டு வருகின்றனர். செல்போன் இணைப்பிற்காக, குழிதோண்டும் பணியில் ஈடுபட்டுள்ள சில தொழிலாளர்களிடம் இது குறித்து கேட்டோம்...படிப்பறிவு இல்லாவிட்டாலும், கூலி வேலையிலும், சில அனுபவ யுக்திகளை பயன்படுத்தி வேலையை எளிதாக்கியுள்ளனர் இந்த தொழிலாளர்கள்...முழுமையாக பள்ளம் தோண்டி நேரத்தை வீண்டிக்காமல், ஒவ்வொரு மீட்டரும்  இடைவெளி விட்டு பள்ளம் தோண்டுகின்றனர். பின்னர் பள்ளத்தில் இறங்கி, செல்போன் இணைப்பு கம்பியை சொருகிவிடுகின்றனர். இதன்மூலம் நேரம் மிச்சமாவதுடன் ஒரு நாளைக்கு ஒரு நபர் 15 மீட்டர் வரை பள்ளம் தோண்டிவிட முடியும்...1 மீட்டருக்கு நூறு ரூபாய் வீதம் இவர்களுக்கு கூலியாக வழங்கப்படுகிறது. எனவே நாள் ஒன்றுக்கு ஆயிரத்து 500 ரூபாய் கூலியாக பெறுகின்றனர்.

படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைக்கவில்லை என்ற விரக்தியில் வீட்டிலே முடங்கி கிடக்கும் இளைய தலைமுறையினர் மத்தியில், கிடைக்கும் வேலையில் முழு ஈடுபாட்டோடு செயல்பட்டால், உரிய பலன் கிடைக்கும் என நிரூபித்துள்ளனர் இந்த கூலி தொழிலாளிகள்...



Next Story

மேலும் செய்திகள்