12-ம் வகுப்பு மாணவன் பள்ளியில் தூக்கிட்டு தற்கொலை உடலை கைப்பற்றி போலீஸ் விசாரணை
பதிவு : ஜூலை 22, 2018, 07:28 PM
மாற்றம் : ஜூலை 22, 2018, 07:33 PM
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில்12-ம் வகுப்பு மாணவன் பள்ளி மைதானத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செய்யாறை அடுத்த மாளிகப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ரஜினிகாந்த். இவரின் மகன் மதன்குமார் செய்யாறை அடுத்த அரசு ஆ​ண்கள் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.  நேற்று பள்ளிக்கு சென்ற மாணவன் வீடு திரும்பாததால் பெற்றோர் அவரை தேடியுள்ளனர். இந்நிலையில் பள்ளி மைதானத்தில் உள்ள மரத்தில் தூக்கிட்ட நிலையில் மதன்குமார் பிணமாக தொங்கியுள்ளார். இது தொடர்பாக காவலாளி அளித்த புகாரை தொடர்ந்து அங்கு சென்ற போலீசார்,  மாணவனின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.