கூடங்குளம் அனல்மின் நிலையத்திற்கு நிலம் வழங்காதவர்களுக்கு பணி வழங்க உயர் நீதிமன்ற மதுரை கிளை தடை

கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு நிலம் அளிக்காதவர்களுக்கு, சி மற்றும் டி பிரிவு பணிகள் வழங்க உயர் நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்துள்ளது.
கூடங்குளம் அனல்மின் நிலையத்திற்கு நிலம் வழங்காதவர்களுக்கு பணி வழங்க உயர் நீதிமன்ற மதுரை கிளை தடை
x
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் உள்ள அணுமின் நிலையத்திற்கு நிலம் அளித்தவர்களுக்கு சி மற்றும் டி பிரிவில் வேலை அளிக்கப்படும் என 1999ஆம் ஆண்டில் ஒப்பந்தம் போடப்பட்ட நிலையில், நிலம் அளித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்காமல்,  வேலையாட்கள் தேவை என அணுமின் நிலைய நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளதாகவும், அதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முன்னாள் திமுக எம்.எல்.ஏ அப்பாவு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு, நீதிபதிகள் செல்வம், பஷீர் முகமது தலைமையிலான அமர்வு முன்  விசாரணைக்கு வந்தது. அப்போது, அணு மின் நிலையத்திற்கு நிலம் அளித்தவர்கள் தவிர மற்றவர்களை, சி மற்றும் டி பிரிவில் வேலையில் அமர்த்த இடைக்கால தடை விதிப்பதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், நெல்லை ஆட்சியர், கூடங்குளம் அணுமின் நிலைய திட்ட இயக்குநர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை இரண்டு வாரத்திற்கு ஒத்தி வைத்தனர். 

நிலம் வழங்கியவர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்கவேண்டும் எனவும் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது எனவும் முன்னாள் திமுக எம்.எல்.ஏ அப்பாவு தெரிவித்தார்.



Next Story

மேலும் செய்திகள்