கொதிக்கும் காப்பி கொட்டி உடலில் தீ காயத்துடன் துடித்த சிறுவன் - மருந்து இல்லை என கைவிரித்த ஆரம்ப சுகாதார நிலையம்
பதிவு : ஜூலை 16, 2018, 06:15 PM
கொதிக்கும் காபி கொட்டி, உடலில் தீக்காயங்களுடன் ஆரம்ப சுகாதார நிலையம் வந்த சிறுவனுக்கு, மருந்து இல்லை என கூறி சிகிச்சை அளிக்காத மருத்துவரை உறவினர்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை மாவட்டம் பாப்பாக்குடியை சேர்ந்த மாரியப்பனின் 8 வயது மகன் திருமலை மணி. இன்று வீட்டில் இருந்தபோது, அவனது சகோதரி காபி போட்டு, அடுப்பில் இருந்து இறக்கியபோது, கை தவறி திருமலை மணி மீது கொட்டியது. அதில், திருமலை மணியின் கால் பகுதியில் காயம் ஏற்பட்டது. 

அலறி துடித்த சிறுவனை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர். ஆனால், அங்கு தேவையான மருந்து இல்லை என கூறி மருத்துவர் சிகிச்சை அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த சிறுவனின் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு மருத்துவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு போலீசார் சென்று சமாதானப்படுத்தினர். இதையடுத்து, தனியார் மருத்துவமனையில் சிறுவன் அனுமதிக்கப்பட்டான்.

தொடர்புடைய செய்திகள்

சிறுவன் மீது இனவெறி தாக்குதல் : தண்டவாளத்தில் தள்ளி விட்ட பெண்

பெல்ஜியமின் ஃபிளாண்டர்ஸ் பகுதியில் கருப்பின இளைஞரை இளம்பெண் ஒருவர் தண்டவாளத்தில் தள்ளி விட்ட காட்சிகள் வெளியாகியுள்ளன.

1184 views

14 வயதில் 240 கிலோ எடை கொண்ட சிறுவன்

அறுவை சிகிச்சையின் மூலம் தற்போது 165 கிலோவாக எடை குறைக்கப்பட்டுள்ளது

1270 views

பள்ளிக்கு அனுப்பாத பெற்றோர் மீது, சிறுவன் காவல்நிலையத்தில் புகார்

உத்தரபிரதேச மாநிலம் எடாவாவில், பள்ளிக்கு அனுப்பாத பெற்றோர் மீது, சிறுவன் காவல்நிலையத்தில் புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

279 views

கால்பந்தை வைத்து சாகசம் செய்யும் இளைஞர்

கால்பந்தை வைத்து சாகசம் செய்யும் இளைஞர்

166 views

பிற செய்திகள்

"கஜா புயல் நிவாரண பணிகள் தீவிரம்" - மாஃ பா பாண்டியராஜன்

புயல் நிவாரண பணிகளில் அரசுக்கு நல்ல பெயர் கிடைப்பதை பார்த்து எதிர்கட்சிகள் தாங்கள் சொன்ன கருத்தையே மாற்றிபேசுவதாக அமைச்சர் மாபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

17 views

மெரினா கடைகள் ஒழுங்குபடுத்தும் பணி...

சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கடைகளை ஒழுங்குபடுத்தும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

163 views

தீப திருநாள் : மகாரத தேர் திருவிழா

கார்த்திகை தீபத்திருநாளின் 7ஆம் நாளான இன்று, திருவண்ணாமலையில், பஞ்ச மூர்த்திகளின் மகாரத தேரோட்டம் நடைபெற்றது.

6 views

புயல் பாதித்த பகுதிகளில் முதல்வர் ஆய்வு : உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ. 10 லட்சம்

தமிழகத்தை புரட்டி போட்ட கஜா புயலில் உருக்குலைந்த தஞ்சை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களை, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் ஆய்வு செய்தார்.

18 views

நாளை கட்டாயம் விடுமுறை அளிக்க வேண்டும் - தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

மீலாது நபியை நாளை அரசு பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சென்னையில் சில தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகள் இயங்க உள்ளதாக சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தகவல் கிடைத்துள்ளது.

2403 views

மூச்சுதிணறலால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் ஆக்சிஜன் செலுத்தும்போது சிலிண்டர் வெடிப்பு

கும்பகோணம் அரசு மருத்துவமனையில் மூச்சுத்திணறல் ஏற்பட்ட பெண்ணுக்கு ஆக்சிஜன் கொடுக்கும் போது சிலிண்டர் வெடித்ததால் அவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

14 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.