நெடுஞ்சாலை, உள்ளாட்சி உள்பட 6 துறைகள் சார்ந்த நலத்திட்டங்களை முதலமைச்சர் பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

நெடுஞ்சாலை, உள்ளாட்சி உள்பட 6 துறைகள் சார்ந்த நலத்திட்டங்களை முதலமைச்சர் பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
நெடுஞ்சாலை, உள்ளாட்சி உள்பட 6 துறைகள் சார்ந்த நலத்திட்டங்களை முதலமைச்சர் பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
x
சென்னை மாநகராட்சி சார்பில் காஞ்சிபுரம் மாவட்டம், முகலிவாக்கம் - சந்தோஷ் நகரில் 85 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள பூங்காவை முதலமைச்சர் திறந்து வைத்தார்.

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் 102 கோடியே 19 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 13 பூங்காக்கள், 2 மேம்படுத்தப்பட்ட சிறுவர் விளையாட்டு மைதானங்கள் மற்றும் 2 பாதாள சாக்கடை திட்டங்களை அவர் திறந்து வைத்தார். 

நிதித்துறை சார்பில் திருவள்ளூர் மாவட்டம் - ஆவடி மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் - பொன்னமராவதி ஆகிய இடங்களில் 1 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இரண்டு சார் கருவூல அலுவலகக் கட்டடங்களை முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார்.

நெடுஞ்சாலைத்துறை சார்பில், கோவை மாவட்டம் போத்தனூரில் 22 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள இரயில்வே மேம்பாலம் மற்றும் கடலூர், திருச்சி, தருமபுரி, திருப்பூர், ஈரோடு, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி  மாவட்டங்களில் 137 கோடியே 74 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 7 ஆற்றுப்பாலங்கள் மற்றும் 2 இரயில்வே  மேம்பாலங்களையும் அவர் திறந்து வைத்தார்.

ஆவடி மற்றும் பொன்னமராவதி ஆகிய இரு இடங்களில் கட்டப்பட்டுள்ள புதிய கருவூல அலுவலக கட்டிடங்களை காணொளி மூலம் திறந்து வைத்தார் முதல்வர்



ஆவடி மற்றும் பொன்னமராவதி ஆகிய இரு இடங்களில் கட்டப்பட்டுள்ள புதிய கருவூல அலுவலக கட்டிடங்களை, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொளி மூலம் திறந்து வைத்தார். அப்போது, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் மற்றும்  அமைச்சர்கள், அரசு துறை உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கோவை - போத்தனூரில், 22 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு உள்ள புதிய ரெயில்வே பாலத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி,  சென்னை - தலைமை செயலகத்தில் இருந்து காணொளி மூலம் திறந்து வைத்தார். இதுதவிர, கடலூர், திருச்சி, தர்மபுரி, திருப்பூர், ஈரோடு, தூத்துக்குடி மற்றும் நெல்லை ஆகிய மாவட்டங்களில் சுமார் 138 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டிருந்த 7 ஆற்றுப்பாலங்களையும், 2 ரெயில்வே மேம்பாலங்களையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்.

Next Story

மேலும் செய்திகள்