காமராசரின் 116 வது பிறந்த நாள் இன்று

காமராசரின் தொண்டையும், தூய அரசியல் வாழ்வையும் பற்றிய ஒரு தொகுப்பு..
காமராசரின் 116 வது பிறந்த நாள் இன்று
x
இப்போதைய விருதுநகர், விருதுபட்டியாக இருந்தபோது, 1903 ஆம் ஆண்டு ஜூலை 15-ஆம் தேதி காமாட்சி என்ற இயற்பெயருடன் பிறந்தவர் தான் பின்னாளில் காமராஜராக அறியப்பட்டார். பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, மரக்கடை வைத்தும், துணிக்கடை வைத்தும் வியாபாரம் செய்துவந்தார். இளமையிலேயே சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட அவர், சத்தியமூர்த்தியின் வழிகாட்டுதலின் படி காங்கிரஸ் இயக்கத்தில் முழுநேர தொண்டனாக தன்னை ஈடுபடுத்தி கொண்டார். கள்ளுக்கடை மறியல், உப்பு சத்தியாக்கிரகம் ஆகியவற்றில் பங்கேற்று சில ஆண்டுகாலம் சிறை தண்டனையும் அனுபவித்துள்ளார்.1953 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் முதலமைச்சராக பொறுப்பேற்றார். அவர் ஆட்சி செய்த அந்த 9 ஆண்டு காலம் தான் தமிழ்நாட்டின் பொற்கால ஆட்சி என்று இன்றுவரை போற்றப்படுகிறது.பதவிக்கே உரிய எந்தவொரு பகட்டையும் காமராஜர் விரும்பவில்லை. அரசாங்கப்பணத்தை வீணாகச் செலவு செய்யக்கூடாது என்று கூறிய காமராஜர், இறுதிவரை ஆடம்பரமில்லாத முதலமைச்சராகவே வலம்வந்தார்.கிராமங்கள்தோறும் பள்ளிக்கூடம், இலவசக் கல்வி, இலவசச்சீருடைகள், மதிய உணவு என்று இன்று நாம் அனுபவிப்பது அத்தனைக்கும் வித்திட்டவர் அவரே.பெரம்பூர் ரயில்பெட்டித் தொழிற்சாலை, ஆவடி கனரகவாகன தொழிற்சாலை உள்ளிட்ட பல்வேறு ஆலைகளுக்கு அடிக்கல் நாட்டியதும் இவரே.வைகை, மேட்டூர், அமராவதி, சாத்தனூர் என்று காமராஜர் காலத்தில் கட்டப்பட்ட அணைகள் தான் இன்றளவும் தமிழக பாசனத்திற்கு பசுமை சேர்க்கிறது.9 ஆண்டுகள் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த காமராஜர், 1975 ஆம் ஆண்டு அக்டோபர் 2 ஆம் நாள் இந்த மண்ணை விட்டு மறைந்தபோது அவரது பெயரில் சொத்துக்களோ, பணமோ எதுவுமில்லை அவர்தான் காமராஜர்.


Next Story

மேலும் செய்திகள்