குழந்தை பாக்கியம் தரும் துரியன் பழம்- பழப்பண்ணையில் விற்பனை அமோகம்

மேட்டுப்பாளையம்- குன்னூர் சாலையில் அமைந்துள்ள அரசின் பழப்பண்ணையில் 40க்கும் மேற்பட்ட மரங்களில் துரியன் பழம் நல்ல விளைச்சல் கண்டுள்ளது.
குழந்தை பாக்கியம் தரும் துரியன் பழம்- பழப்பண்ணையில் விற்பனை அமோகம்
x
குன்னூர் அருகே குழந்தை பாக்கியம் தரக்கூடிய துரியன் பழத்தின் விற்பனை அமோகம் அடைந்துள்ளது. மேட்டுப்பாளையம் - குன்னூர் சாலையில் அமைந்துள்ள அரசின் பழப்பண்ணையில் 40க்கும் மேற்பட்ட மரங்களில் துரியன் பழம் நல்ல விளைச்சல் கண்டுள்ளது. இதனையடுத்து, பழப்பண்ணையில் துரியன் பழம் விற்பனைக்கு குவிந்துள்ளது. ஒரு கிலோ ஒன்றுக்கு 400 முதல் 600 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. மலட்டு தன்மையை குணப்படுத்தி, குழந்தை பாக்கியத்தை உருவாக்க கூடிய துரியன் பழம், அதிக மருத்துவத்தன்மை கொண்டது. வாரம் இருமுறை, துரியன் பழம் சாப்பிட்டு வந்தால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து உடல் வலுவடைவதோடு, சர்க்கரை, ரத்த அழுத்தம், தைராய்டு உள்ளிட்ட பிரச்சினைகள் சீராகும் என சித்த மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்