2004ல் ஜெயலலிதா, சசிகலா தாக்கல் செய்த மனுக்கள் - தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை தள்ளி வைத்தது உயர் நீதிமன்றம்

2004ஆம் ஆண்டு ஜெயலலிதா தாக்கல் செய்த மனுவின் மீதான தீர்ப்பை உயர் நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.
2004ல் ஜெயலலிதா, சசிகலா தாக்கல் செய்த மனுக்கள் - தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை தள்ளி வைத்தது உயர் நீதிமன்றம்
x
கடந்த 1991ஆம் ஆண்டு முதல் 1994ஆம் ஆண்டு வரை வருமான வரிக் கணக்கை சமர்ப்பிக்கவில்லை என கூறி ஜெயலலிதா மற்றும் சசிகலா மீது வருமான வரித்துறை சார்பாக எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் இருவரும் கடந்த 2004ஆம் ஆண்டு மனுதாக்கல் செய்தனர்.  

2014 ஆம் ஆண்டில் இருவரும் வருமான வரியை அபராத தொகையுடன் செலுத்தியதால், எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்குகளை வாபஸ் பெற வருமான வரித்துறைக்கு அனுமதி அளிக்கப்பட்டது. 

இந்த நிலையில், உயர் நீதிமன்றத்தில் 14 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள இருவரின் மனுக்களும் விசாரணைக்கு வந்தபோது, இந்த தகவல்கள் தெரிவிக்கப்பட்டன. இதையடுத்து, மனுக்கள் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதி நிர்மல்குமார் ஒத்தி வைத்தார்.

Next Story

மேலும் செய்திகள்