கே.ஆர்.எஸ். அணை நிரம்புவதால் விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு - காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

கே.ஆர்.எஸ். அணை நிரம்பும் நிலையில் இருப்பதால், காவிரி கரையோரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
கே.ஆர்.எஸ். அணை நிரம்புவதால் விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு - காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
x
கர்நாடகாவின் குடகு, சிக்மகளூரு உள்ளிட்ட காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக, காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் கபினி, ஹேரங்கி அணைகள் தனது முழுக்கொள்ளளவை எட்டியுள்ளன.

இதனால் கபினியில் இருந்து விநாடிக்கு 45 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.  இதேபோல், கே.ஆர்.எஸ் அணையும் தனது முழுக்கொள்ளளவான 124 புள்ளி 80 அடியில், 121 புள்ளி 42 அடியை எட்டியுள்ளது.

இதனால் அணையில் இருந்து எந்த நேரமும் விநாடிக்கு 10 ஆயிரம் கன அடி நீர் திறக்க வாய்ப்புள்ளது. இதனால் காவிரி கரையோரம் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு, மத்திய நீர்வள ஆணையம், கர்நாடக அரசை வலியுறுத்தியுள்ளது. 

இதன் காரணமாக, மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு மேலும் அதிகரிக்கும் என்பதால், தமிழகத்தின்  காவிரி கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்