காவலர்களுக்கு வார விடுப்பு : அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

காவல் துறையினருக்கு வார விடுப்பு வழங்குவது குறித்து அரசு என்ன நிலைப்பாட்டில் இருக்கிறது என்பதை 19ம் தேதிக்குள் தெரிவிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
காவலர்களுக்கு வார விடுப்பு : அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
x
* காவல்துறையினரின் நலன்  தொடர்பான வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

* அப்போது ஆஜராகி பேசிய அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன்,காவல்துறையினருக்கு  வார விடுப்பு வழங்க வகை செய்யப்பட்டுள்ளதாகவும்,வார விடுப்பு நாளில் பணிக்கு வரும் காவலர்களுக்கு 200 ரூபாய் கூடுதல் ஊதியம் வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

* அப்போது பேசிய நீதிபதி கிருபாகரன்,போக்குவரத்து காவல்துறையினர் குடும்பத்தினருடன் நேரம் செலவழிப்பதால், அவர்களின் குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்குவதாக குறிப்பிட்டார்.

* காவல்துறையில் பிற பணிகளில் ஈடுபடும் காவலர்களை வாரத்தில் ஒரு நாளாவது தங்கள் குடும்பத்துடன் செலவிட அரசு அனுமதிக்க வேண்டும் என நீதிபதி அறிவுறுத்தினார்.

* காவல்துறையினர் நல ஆணையம் தொடர்பாக உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு செயல்படுத்தப்படுவது எந்த நிலையில் உள்ளது என்பது குறித்து விளக்கமளிக்கவும் நீதிபதி குறிப்பிட்டார்.

* காவல்துறை இல்லையென்றால் தடி எடுத்தவனெல்லாம் தண்டல்காரன் என்ற நிலை உருவாகி விடும் என்றும் நீதிபதி எச்சரிக்கை தெரிவித்தார் 

* காவல் துறையினருடன் குற்றவாளிகளுடன் கைகோர்க்க கூடாது என குறிப்பிட்ட நீதிபதி,  காவல்துறை மீதும் மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை  பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை என்று குறிப்பிட்டார்.

* காவல் துறையினருக்கு வாரம் ஒரு நாள் விடுப்பு என்பதை நடைமுறைப்படுத்த அரசு என்ன முடிவு எடுக்கப் போகிறது என்பது குறித்து விளக்கம் அளிக்குமாறு அறிவுறுத்திய நீதிபதி, வழக்கை 19 ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

Next Story

மேலும் செய்திகள்