டி.என்.பி.எஸ்.சி. தேர்வு தேதி மாற்றம் - அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு

செப்டம்பர் மாதத்திற்கு பதில் அக்டோபர் மாதம் நடைபெறும்
டி.என்.பி.எஸ்.சி. தேர்வு தேதி மாற்றம் - அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு
x
யு.பி.எஸ்.சி., தேர்வு நாளில் நடைபெற இருந்த டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகள் வேறு தேதிகளுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளன.

* தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில், வனப்பயிற்சியாளர்  உள்ளிட் பதவிகளுக்கான தேர்வு செப்டம்பர் மாதம் 23ம் தேதி முதல் 30ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

* இந்த  நாட்களில், மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகள் இருந்ததால், விண்ணப்பதாரர்கள் குழப்பம் அடைந்தனர். 

* இது தொடர்பான செய்தி தந்தி டிவியில் வெளியானது.

* இந்நிலையில், வனத்துறை பதவிகளுக்கான தேர்வுகள் செப்டம்பர் மாதத்திற்கு பதில் அக்டோபர் மாதம் 6ம் தேதி முதல் 13ம் தேதி  வரை நடத்தப்படும் என , தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்